» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை: கணவரின் மரணத்தால் விபரீத முடிவு!!

வெள்ளி 8, நவம்பர் 2019 12:35:13 PM (IST)

எப்போதும் வென்றான் அருகே கணவரின் மறைவால் வேதனையில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் அருகேயுள்ள ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி விஜயலட்சுமி (27). இவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு குழந்தையில்லை. இதனால் மனவேதனையில் முத்துப்பாண்டி கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

கணவர் இறந்த பின்னர், விஜயலட்சுமி பசுவந்தனை அருகே புதுப்பட்டி கிராமத்தில் உள்ள தந்தை மாரியப்பன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், கணவரின் மறைவால் மன வேதனையில் இருந்து வந்த அவர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்காெலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமொழி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest Cakes



Anbu Communications







Thoothukudi Business Directory