» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே பைக் விபத்து- 2 வாலிபர்கள் பலி

வெள்ளி 8, நவம்பர் 2019 12:28:20 PM (IST)

தூத்துக்குடி அருகே பாலத்தின் தடுப்புசுவரில் பைக் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரதாபமாக உயிரிழந்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை ராஜீவ் காலனியை சேர்ந்தவர்கள் காளிங்கம் (37), சாமிநாதன் (31). நண்பர்களான இவர்கள் இருவரும் கட்டிடத்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். நேற்று இருவரும் எப்போதும் வென்றான் அருகே உள்ள தளவாய்புரத்திற்கு கட்டிட வேலைக்கு சென்றனர். மதியம் சாப்பிடுவதற்காக பசுவந்தனைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் மீண்டும் தளவாய்புரத்திற்கு திரும்பி சென்றனர். 

மீனாட்சிபுரம் விலக்கு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக பாலத்தின் தடுப்புசுவரில் அவர்களது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.இதில் காளிங்கம், சாமிநாதன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அவ்வழியாக சென்றவர்கள் காயமடைந்து கிடந்த இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து பசுவந்தனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Anbu CommunicationsBlack Forest Cakes


Thoothukudi Business Directory