» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் முத்துநகர் ரயில்

வெள்ளி 8, நவம்பர் 2019 10:39:07 AM (IST)

முத்துநகர் ரயிலில் புதிய எல்ஹெச்பி வகை பெட்டிகளால் கடும் சத்தம், அதிர்வு போன்றவற்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்தியாவில் முன்பு ரயில்களில் நீல வண்ணத்தில் ரயில் பெட்டிகள் (கோச்சுகள்) அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் இடவசதி அதிகம் இருக்கும், மேலும் நீண்ட தூரம் செல்லும் பயணிகளுக்கு எவ்வித அதிர்வாே, சத்தங்களோ இருக்காது. ஆனால் தற்போது புதிய வகை சிவப்பு வண்ணத்தில் எல்ஹெச்பி வகை பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த லிங் ஹாப்மேன் புஷ் (LHB) நிறுவனத்தின் வடிவமைப்பில் இந்திய ரயில்வேயால் எல்எச்பி ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இவை எளிதில் தீப்பிடிக்காது, பெட்டி முழுவதும் ஸ்டீலால் வடிவமைக்கப்பட்டு சிவப்பு நிறத்தில் இருக்கும். ஒரு பெட்டி 51.7 டன் எடை கொண்டது. சொகுசு இருக்கைகள், செல்போன் சார்ஜ் போடும் வசதி உட்பட பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன. ஆனால் புதிய ரயில்களில் பயணிக்கும் போது கடும் அதிர்வு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இது குறித்து தூத்துக்குடியை சேர்ந்த சமூகஆர்வலர் சிவராமன் என்பவர் கூறுகையில், வழக்கமாகச் செல்லும் விரைவு ரயில் பெட்டியில் 72 படுக்கைகள், ஏசி பெட்டியில் 64 படுக்கைகள் இருக்கும். எல்எச்பி பெட்டிகளில் 80 படுக்கைகள், ஏசி பெட்டியில் 72 படுக்கைகள் இருக்கும். முக்கிய விரைவு ரயில்களின் பெட்டிகள் படிப்படியாக எல்எச்பி பெட்டிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. முக்கியமாக எல்எச்பி ரயில் பெட்டிகள் அதிர்வு இல்லாமல், பாதுகாப்பாக, வேகமாக செல்லக்கூடியது என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அதற்கு மாறாக  புதிய வகை பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 24 ரயில்பெட்டிகளுக்கு பதில் 22 பெட்டிகளே இணைக்கப்பட்டுள்ளன. மேலும் அதிர்வு இல்லாமல் இருக்கும் என கூறப்பட்ட நிலையில் தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நான் கடந்த சில தினங்களுக்கு முன் பயணம் செய்கையில், ரயில் கிளம்பியது முதலே கடும் சத்தம், அதிர்வு ஏற்பட்டு கொண்டே இருந்தது. இதனால் ரயிலில் பயணித்த சிறியவர்கள், பெரியவர்கள், பெண்கள் என அனைவருமே அதிர்ச்சியடைந்தனர். நன்றாக தூங்கி கொண்டிருந்தவர்கள் கூட அதிர்ந்து போய் எழுந்தனர். பின்னர் அவர்கள் தூங்கவே இல்லை.

இதையெல்லாம் பார்க்கும் போது பழைய வகை ரயில் பெட்டிகளே இருந்திருக்கலாம் என எண்ண தோன்றுகிறது. எனவே ரயில்வே நிர்வாகம் பயணிகள் நலன் கருதி எல்ஹெச்பி வகை ரயில்பெட்டிகளில் அதிர்வு, சப்தம் இல்லாதவாறு மேம்படுத்துவது அவசியம். இல்லையென்றால் அதை திரும்ப பெற்று கொண்டு பழைய நீல வண்ண ரயில் பெட்டிகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இது குறித்து ரயில்வே அமைச்சருக்கும் ரயில்வே அதிகாரிகள் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

குருNov 11, 2019 - 01:31:01 PM | Posted IP 162.1*****

IPPOTHUTHAAN SUPER AKA ULLATHU.

அருண்Nov 9, 2019 - 01:42:47 PM | Posted IP 108.1*****

என்ன டெக்னாலஜியோ

TuticorianNov 8, 2019 - 03:23:08 PM | Posted IP 162.1*****

Absolutely true. Generates more noise compared to the old type coaches and also appears to be not strong enough.

ராஜாNov 8, 2019 - 11:30:16 AM | Posted IP 162.1*****

சபாஷ். சரியான செய்தி.காயலாங்கடை பெட்டி போல உள்ளது. உடனே திரும்ப பெற வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest Cakes


Anbu Communications
Thoothukudi Business Directory