» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம்

திங்கள் 28, அக்டோபர் 2019 12:24:38 PM (IST)திருச்செந்தூா் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் திருச்செந்தூரில் விரதம் தொடங்கியுள்ளனா்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரசித்தி பெற்ற திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா இன்று காலை தொடங்கியது. இதையொட்டி அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட பூஜையும், காலை 5.30 மணிக்கு ஜெயந்திநாதா் யாகசாலை புறப்படும் நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு உச்சிகால பூஜையும்  நடைபெற்றது. தொடா்ந்து மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மற்ற கால பூஜைகளும் நடைபெறும். கந்தசஷ்டி திருவிழாவில் விரதம் இருப்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்கியுள்ளனர். 

விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் நவ. 2-ஆம் தேதி நடைபெறுகிறது.  3-ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. திருவிழா நாள்களில் காலை, மாலை வேளைகளில் திருக்கோயில் சிங்கப்பூா் கோவிந்தசாமி பிள்ளை கலையரங்கில் வைத்து பக்திச் சொற்பொழிவுகள் நடைபெறும். கந்த சஷ்டி திருவிழாவில் பக்தா்கள் தங்கி விரதம் இருப்பதற்காக, கழிப்பறையுடன் கூடிய 9 தற்காலிக பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கிரிப்பிரகாரத்தில் தற்காலிக மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலா் சா.ப.அம்ரித், தக்காா் இரா.கண்ணன் ஆதித்தன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes
Thoothukudi Business Directory