» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வஉசி. கல்லூரியில் ஊரை தெரிஞ்சிகிட்டோம் போட்டி : வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

ஞாயிறு 20, அக்டோபர் 2019 1:00:15 PM (IST)தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் ஊரை தெரிஞ்சிகிட்டோம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கேடயங்களை வழங்கினார்.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் சுட்டி விகடன் மற்றும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி இணைந்து நடத்திய தூத்துக்குடி 200 ஊரை தெரிஞ்சிகிட்டோம் போட்டிகளில்  வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கவுரவித்து கேடயம் வழங்கும் விழா இன்று (20.10.2019) நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு கேடயங்களை வழங்கி கவுரவித்தார்.   

விழாவில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்டோபர் 20ம் தேதி சிறப்பானதொரு நாளாகும். ஏனெனில் 33 ஆண்டுகளுக்கு முன்பு அக்டோபர் 20ம் தேதிதான் தூத்துக்குடி மாவட்டம் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேநாளில் இவ்விழா நடைபெறுவது சிறப்புக்குரியது ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தின் சிறப்புகள் 200 அடங்கிய இன்போ புக் வெளியிடப்பட்டு இப்புத்தகத்தில் உள்ள சிறப்புகளில் இருந்து ஊரை தெரிஞ்சிகிட்டோம் என்ற போட்டி வைக்கப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இன்று பரிசுகள் வழங்கப்படுகிறது. இதுபோன்ற இன்போ தேர்வுகளை மாணவ, மாணவிகள் எழுதுவதால் அது உங்களுக்கு பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு முன்னுதாரணமாக அமையும். இப்போட்டியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அதிக அளவில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். 

அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், மாணவ, மாணவிகள் செல்போனில் அதிக நேரம் இருக்காமல் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்த தூத்துக்குடியில் புத்தக திருவிழா கடந்த வாரம் நடத்தப்பட்டது. இதில் அதிக அளவில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று பார்வையிட்டுள்ளனர். 

இது புத்தக வாசிப்பை மேலும் ஊக்கப்படுத்தும். உலகில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்ள செய்தித்தாள் வாசிப்பு முக்கியமான ஒன்றாகும். எனவே, மாணவ, மாணவிகள் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப்போல பொது அறிவு நிகழ்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவைகளையும் அறிந்து சிறந்து விளங்க வேண்டும். இவ்வாறு மாவட்டஆட்சியர் பேசினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், முதன்மை கல்வி அலுவலர் ஞானகெளரி, வ.உ.சி. கல்லூரி முதல்வர் வீரபாகு, விகடன் குழும துணைத்தலைவர் சுந்தர் தியாகராஜன் மற்றும் சுட்டி விகடன் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsBlack Forest Cakes


Anbu Communications


Thoothukudi Business Directory