» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கல்லுாரி மாணவி திடீர் மாயம்

ஞாயிறு 20, அக்டோபர் 2019 12:07:59 PM (IST)

தூத்துக்குடியில் கல்லுாரி மாணவி திடீரென மாயம் ஆனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி அண்ணாநகர் 4ம் தெருவை சேர்ந்தவர் சிவன் இவரது மகள் பிரியா (21). இவர் தூத்துக்குடியிலுள்ள ஒரு கல்லுாரியில் பொறியியல் படிப்பு படித்து வருகிறார். சென்ற 18ம் தேதி கல்லுாரி சென்ற இவர் மாலை வீடு திரும்பவில்லையாம். அவரை பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க இயலவில்லை. இது குறித்து மாணவியின் தந்தை சிவன் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில் அதே கல்லுாரியில் இவருடன் படிக்கும் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த உதயகுமார் என்ற மாணவருடன் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam PasumaiyagamBlack Forest Cakes

CSC Computer Education


Anbu CommunicationsThoothukudi Business Directory