» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தெருநாய்களால் அதிகரித்து வரும் தொல்லை : காயல்பட்டினத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஞாயிறு 20, அக்டோபர் 2019 11:59:03 AM (IST)காயல்பட்டணத்தில் தெருநாய் தொல்லை அதிகரித்து வருவதாகவும் அதை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தின் மூன்றாவது மிகப்பெரிய நகராகும். 50,000 மக்களுக்கும் மேல் வாழும் இவ்வூரில், கடந்த சில ஆண்டுகளாக - தெருநாய்களின் அதிகரிப்பால், பொதுமக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.நாய்கள் கடித்து பாதிப்புக்கு உள்ளானவர்கள், நாய்கள் விரட்டியதால் கீழே விழுந்து காயமுற்றவர்கள், கால்நடைகளை இழந்தவர்கள், தங்களின் அன்றாடப் பணிகளை அச்சமின்றி செய்ய முடியாதவர்கள் என ஏராளமானோர் இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து காயல்பட்டினம் நகராட்சியிடம் பல ஆண்டுகளாக முறையிட்டும் -அவ்வப்போதைக்கு வெறும் கண்துடைப்பு நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தெருநாய்களுக்குக் கருத்தடை செய்ததாகப் பல லட்சம் ரூபாய் கணக்கு காண்பிக்கப்பட்ட பிறகும், தெருநாய்களின் எண்ணிக்கை குறையவில்லை; அதிகரிக்கவே செய்துள்ளது.

இந்த அவல நிலையை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடல் அருகில், மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு ஏற்பாட்டில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது. மெகா அமைப்பின் தலைவர் முஹைதீன் தலைமையில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தின் முடிவில், - நாய்களுக்குக் கருத்தடை என்ற பெயரில் அரங்கேற்றப்பட்ட முறைகேடு குறித்து அரசு விசாரணை செய்ய வேண்டும் என்றும், கண்துடைப்பு நடவடிக்கைகளைக் கைவிடப்பட்டு நிரந்தரத் தீர்வுகள் வழங்கப்படவேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், 30 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்தப் படவில்லையெனில் போராட்டம் விரிவுபடுத்தப்பட்டு, சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த ஆர்ப்பாட்டத்தில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

makkalil oruvanOct 22, 2019 - 11:15:10 AM | Posted IP 162.1*****

peama neengale antha naaigalai adicha kondra vendiyathu thaane...

makkalOct 21, 2019 - 01:53:33 PM | Posted IP 108.1*****

tuticorin muthiyapuram kumarasamy nagar the same problem , panri tholilai roba

makkalOct 20, 2019 - 10:21:51 PM | Posted IP 108.1*****

tuticoin fatima nagar (george road ) street the same problem......

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes
Thoothukudi Business Directory