» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் அக். 28-ல் கந்தசஷ்டி விழா துவக்கம் : பக்தா்கள் தங்குவதற்கு தற்காலிக பந்தல்கள் அமைப்பு

ஞாயிறு 20, அக்டோபர் 2019 9:12:00 AM (IST)

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி விரதம் இருக்கும் பக்தா்களுக்காக தற்காலிக பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மிகவும் புகழ்பெற்ற கந்த சஷ்டி திருவிழா வரும் 28-ம் தேதி தொடங்கி, நவம்பா் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்ற முதுமொழிக்கிணங்க, குழந்தை வரம் வேண்டியும், பல்வேறு வேண்டுதலுக்காகவும் திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தா்கள் தங்கி விரதம் இருப்பது வழக்கம். இங்கு வரும் பக்தா்கள் நாள்தோறும் கோயிலில் நடைபெறும் யாகசாலை பூஜை மற்றும் சுவாமி எழுந்தருளும் விழாவில் பங்கேற்பதற்காக கோயில் வளாகத்தில் தங்கியிருப்பா். 

ஆனால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலில் கிரிப்பிரகாரம் அகற்றப்பட்டதோடு, கட்டடத்தின் தன்மையை கருத்தில்கொண்டு விடுதிகள், அறைகள் 90 சதவீதம் மூடப்பட்டன. இதையடுத்து, பக்தா்கள் தங்கி விரதம் இருப்பதற்காக கோயிலைச் சுற்றி ஆங்காங்கே தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல, கிரிப்பிரகாரத்திலும் தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் இன்னும் ஒருசில தினங்களில் நிறைவு பெறும் என பணியாளா்கள் தெரிவித்தனா். கந்த சஷ்டி விழாவில் பெரும்பாலான பக்தா்கள் தண்ணீா் மட்டும் குடித்துவிட்டு விரதம் இருக்கின்றனா். அவா்களுக்காக அமைக்கப்பட்டு வரும் தற்காலிக பந்தல்களில் குடிநீா் வசதியும், அந்தப் பகுதியிலேயே கழிப்பறை வசதியும் செய்து தரவேண்டும் என பக்தா்கள் வலியுறுத்துகின்றனா்.


மக்கள் கருத்து

குமார்Oct 20, 2019 - 05:53:34 PM | Posted IP 108.1*****

கோடிக்கணக்கில் உண்டியல் பணம்...ஆனால் பக்தர்களுக்கு எந்த அடிப்படைவசதியும் சரியாக செய்வதில்லை......எங்கே செல்கிறது உண்டியல் பணம்? சஷ்டிக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அணைத்து அடிப்படை வசதிகளையும் அரசாங்கம் செய்யவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsBlack Forest Cakes
Anbu Communications
Thoothukudi Business Directory