» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஹலோ போலீஸ் ரோந்து வாகனம் : டிஎஸ்பி., பிரகாஷ் துவக்கி வைத்தார்

சனி 19, அக்டோபர் 2019 6:37:59 PM (IST)
தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பிற்காக ஹலோ போலீஸ் எனும் கண்காணிப்பு ரோந்து வாகனம் துவக்கி வைக்கப்பட்டது.

தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பிற்காக ஹலோ போலீஸ் எனும் கண்காணிப்பு ரோந்து வாகனத்தை தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடிக்கு வந்து செல்லும், பொதுமக்கள் மற்றும் அவரது உடைமைகள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு போக்குவரத்து அதிகமாக இருந்து வரும் தூத்துக்குடி நகரின் முக்கிய பகுதிகளான ஜே.என் டெக்ஸ்டைல்ஸ், பழைய பேருந்து நிலையம், கண்ணாசில்க்ஸ், குரூஸ் பர்னாந்து சிலை, சென்னை சில்க்ஸ், அழகர் ஜுவல்லர்ஸ் ஆகிய 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலர் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து காவலர்கள் வாகன நெரிசலை ஒழுங்குபடுத்தவும் போக்குவரத்தினை சீர் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அது போல் போக்குவரத்து அதிகமாக இருக்கும் 12 இடங்களில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில், காவலர்கள் ரோந்து பணி நடைபெறும். சீருடை இல்லாத காவலர்களும் ரோந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 திசைகளில் சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட ரோந்து வாகனம் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் எவ்வித அச்சம், இடையூறின்றி தூத்துக்குடியில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி தீபாவளியை பாதுகாப்பான முறையில் கொண்டாடலாம். வரும் 27ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., அருண் பாலகோபாலன் அறிவுரைபடி பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

நகர் பகுதிகளில் 200 சிசிடிவி கேமராக்கள் உள்ளது. அதை வைத்து கூட்டத்தில் உள்ள குற்றவாளிகளை கண்காணித்து செயின் பறிப்பு, திருட்டை தடுக்கலாம் பொதுமக்களுக்கு ஏதேனும் புகார்கள் இருந்தால் 9514144100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணகுமார், அருள், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுசில், ஊர்க்காவல பெருமாள் சப்இன்ஸ்பெக்டர்கள் ராஜாமணி, காந்திமதி, சங்கர், போக்குவரத்து சப்இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார் வெங்கடேஷ், மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory