» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சி : மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்

சனி 19, அக்டோபர் 2019 12:03:30 PM (IST)



தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகள் குறித்த பயிற்சியை மாநகராட்சி ஆணையர் வி.பி.ஜெயசீலன் தொடங்கி வைத்தார். 

தூத்துக்குடி விழைவுப்பூக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் காமராஜ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குற்றவியல் துறை மற்றும் என்எஸ்எஸ் மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகள் குறித்து பயிற்சி அக்.18, 19 ஆகிய 2 நாட்கள்  நடைபெற்றது. இப்பயிற்சியை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வி.பி.ஜெயசீலன் தொடங்கி வைத்தார். 

இதில் விழைவுப்பூக்கள் சேவை அமைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து நிறுவனர் விண்மீன் பாலா உரையாற்றினார். முதலுதவி குறித்து டாக்டர் ராஜா பயிற்சி அளித்தார். பேரிடர் சமயங்களில் மக்களின் மனநிலை குறித்து மாவட்ட குழந்தை பாதுகாப்பு ஆற்றுபடுத்துனர் ஜான் மோசஸ் கிரிதரன் உரையாற்றினார். இதில் தீயணைப்பு துறையிலிருந்து ஜெயசங்கர் உரையாற்றினார். இப்பயிற்சியில் துறை தலைவர் ரமேஷ் கண்ணா, பேராசிரியர், பேராசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Anbu Communications



Black Forest Cakes



Thoothukudi Business Directory