» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் விபத்தில் கால் முறிந்ததால் வாலிபர் தற்கொலை

சனி 19, அக்டோபர் 2019 11:23:45 AM (IST)

புதூர் அருகே பைக் விபத்தில் கால் முறிவு ஏற்பட்டதால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், புதூர் அருகேயுள்ள சிவலார்பட்டி கிராமம், காலனித் தெருவைச் சேர்ந்தவர் சண்முகவேல் மகன் காளிமுத்து (24). இவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்னர் நிகழ்ந்த பைக் விபத்தில் கால் முறிவு ஏற்பட்டது. இதனால் வேலைக்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதில் மனவேதனையடைந்த அவர் நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலெட்சுமி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Anbu Communications


Black Forest Cakes







Thoothukudi Business Directory