» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

சனி 19, அக்டோபர் 2019 11:12:21 AM (IST)

தூத்துக்குடியில் கடன் தொல்லையால் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி தாமஸ்நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் மீன் வியாபாரி. இவரது மனைவி லில்லி (29). இந்த தம்பதியருக்கு அஸ்வினி (10), டேனியல் (8) என  இரண்டு குழந்தைகள் உள்ளனர். லில்லி அக்கம்பக்கத்தினரிடம் ரூ.2லட்சம் வரை கடன் வாங்கினாராம். பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லையாம். கடன் தொல்லை தவித்த அவர், கடந்த 15ம் தேதி 2 குழந்தைகளுடன் மாயமானார். 

அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து லில்லியின் தாயார் சீலியம்மாள் (55) தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து

XxxxOct 20, 2019 - 03:13:21 PM | Posted IP 173.2*****

Kodi kannakula vangunavan nimathiya valran.but 5 10 vangunavan

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory