» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாடுகளுக்கு இலவச தடுப்பூசி பணி : அக்.14-ல் துவக்கம்

வியாழன் 10, அக்டோபர் 2019 3:14:29 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் மாடுகளுக்கு இலவசமாக கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போடும் பணி 14.10.2019 முதல் 03.11.2019 வரை நடைபெறுகிறது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கால் மற்றும் வாய் நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு குறைவான கன்றுகள் மற்றும் கன்று ஈனும் பருவத்தில் உள்ள கால்நடைகள் தவிர அனைத்து மாடுகளுக்கும் இலவசமாக கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போடும் பணி 14.10.2019 முதல் 03.11.2019 வரை கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.

கால் மற்றும் வாய் நோய் வைரஸ் என்னும் நச்சுக்கிருமியினால் ஏற்படுகிறது. நோய் பாதித்த கால்நடைகளில் வாய் மற்றும் கால் பகுதியில் கொப்புளங்கள் ஏற்பட்டு அதிக காய்ச்சலுடன் காணப்படும். இந்நோய் பாதித்த கறவை மாடுகளில் பால் உற்பத்தி பெரிதும் குறைவதால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே இந்நோயை முற்றிலும் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி போடுவது மிகவும் அவசியம். தடுப்பூசி பணிக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. 

ஒவ்வொரு வருடமும் 6 மாதத்திற்கு ஒரு முறை தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறவுள்ள 17-வது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி திட்ட பணியில், கால்நடை வளர்ப்போர் தவறாது அனைத்து மாட்டினங்களுக்கும் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போட்டு பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu CommunicationsNalam Pasumaiyagam

CSC Computer Education

Black Forest CakesThoothukudi Business Directory