» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் கேஸ்சிலிண்டர் விலை நிர்ணயம் : கூடுதல் ஆட்சியர் அறிவிப்பு

வியாழன் 10, அக்டோபர் 2019 1:18:44 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டு கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் குறித்து கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், தகவல் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை தூத்துக்குடியில் ரூ.666 ஆகவும், கோவில்பட்டியில் ரூ.665- ஆகவும், கழுகுமலையில் ரூ.673., கயத்தாரில் ரூ.676, எட்டயபுரத்தில் ரூ.665.00- ஆகவும் மற்றும் சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.683, பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை தூத்துக்குடியில் ரூ.666 ஆகவும், ஸ்ரீவைகுண்டத்தில் ரூ.667- , திருச்செந்தூரில் ரூ.667.00 ஆகவும் மற்றும் வல்லநாட்டில் ரூ.667. எனவும்,  இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.666. எனவும், 01.10.2019 முதல் எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

எனவே நுகர்வோர்கள் எரிவாயு முகவர்களிடமிருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கு (14.2 கி) மேலே குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

NishaOct 12, 2019 - 11:16:14 AM | Posted IP 162.1*****

Sir (Vishnu Chandran), delivery boy collecting Rs.700/- for near 1st gate. Therefore, take appropriate action against them.

princeOct 10, 2019 - 05:21:54 PM | Posted IP 173.2*****

delivery charge ? ( the cylinder doer delivery or not ? Please let us know!!!!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam
CSC Computer Education

Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory