» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தொழிற் பழகுநர் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

வியாழன் 10, அக்டோபர் 2019 11:48:26 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற் பழகுநர் பயிற்சியில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தால் 15.10.2019 வரையிலான காலத்தில் தொழிற் பழகுநர் பயிற்சித் திட்டத்தினை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, தொழிற் பழகுநர் சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, "Apprenticeship Pakhwada” என்ற திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து சிறு, குறு மற்றும் பெரும தொழில் நிறுவனங்கள், உணவகங்கள், மருத்துவமனைகள் மற்றும் ஜவுளிக்கடைகள் போன்ற அனைத்து நிறுவனங்களும் தங்களது நிறுவனத்தை Apprenticeship Portal–ல் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் பதிவு செய்து, தகுதியுள்ள பயிற்சியாளர்களை தொழிற் பழகுநர்களாக சேர்க்கை செய்து 100 சதவீதம் முழுமையாக தொழிற் பழகுநர் சேர்க்கையினை மேற்கொண்டு நிறுவனங்கள் பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொள்கிறார்.

http://apprenticeship.gov.in/Pages/Apprenticeship/EstablishmentRegistration.aspx மேலும், தொழிற் பழகுநர் சட்டம் 1961–ன்படி, 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் (நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட) கொண்ட நிறுவனங்கள் தொழிற் பழகுநர் திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களுக்கு தொழிற் பழகுநர் பயிற்சியளித்தல் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், கெஜட் ஆப் இந்தியா, எண். 561, நாள்: 25.09.2019–ன்படி, தொழிற்பழகுநர் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்பட வேண்டும்.

தொழிற் பழகுநர் சட்டத்தின் கீழ் பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது தொழிற் பழகுநர் சட்டம் 1961, பிரிவு 30-ன் கீழ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதால், அனைத்து தொழில் நிறுவனங்களும் தொழிற்பழகுநர் திட்டத்தில் பதிவு செய்து சட்ட நடவடிக்கைகளை தவிர்க்க ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், விவரங்களுக்கு தூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்திலுள்ள தூத்துக்குடி மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் ஜெ.ஏஞ்சல் விசய நிர்மலா அவர்களை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண். 0461-2340041. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Anbu CommunicationsBlack Forest Cakes
Thoothukudi Business Directory