» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை நகை, பணம் திருட்டு

வியாழன் 10, அக்டோபர் 2019 10:31:22 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி தாளமுத்துநகர், காமராஜர் தெரு கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் ரவிகுமார். இவரது மனைவி இசக்கியம்மாள் (34). இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரவிகுமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில், கடந்த 8ம் தேதி இசக்கியம்மாள் தனது 2 குழந்தைகளுடன் குலசை தசரா திருவிழாவுக்கு சென்றுள்ளார்.

பின்னர் அவர் நேற்று வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 3 பவுன் நகை, 5ஆயிரம் பணம் திருடுபோயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தாளமுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிந்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications


Nalam Pasumaiyagam


CSC Computer Education

Black Forest CakesThoothukudi Business Directory