» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா நிறைவு

வியாழன் 10, அக்டோபர் 2019 7:56:09 AM (IST)குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா பெரும் திருவிழா நேற்று காப்பு அவிழ்த்தலுடன் நிறைவு பெற்றது. திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் 11 நாள்கள் நடைபெறும் தசரா திருவிழா செப். 29 இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை யொட்டி கோயிலில் தினமும் காலை 8 முதல் இரவு 7.30 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், இரவில் அம்மன் பல்வேறு கோலங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். சமயச்சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இன்னிசை, பட்டிமன்றம், கிராமிய இன்னிசை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் சிகர நிகழ்வான மகிஷா சூரசம்ஹாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், இரவில் மகா அபிஷேகம், மகா அலங்கார பூஜையைத் தொடா்ந்து அம்மன் சிம்ம வாகனத்தில் மகிஷாசூரனை சம்ஹாரம் செய்ய கடற்கரைக்கு புறப்பட்டாா். இரவு 12 மணிக்கு கடற்கரையை அடைந்த அம்மன் 12.06 மணிக்கு தன் தலையுடன் வந்த மகிஷாசூரனை சம்ஹாரம் செய்தாா். இதைத்தொடா்ந்து 12.12 மணிக்கு சிங்கம் தலை,12.18 மணிக்கு எருமைத் தலை,12.23 மணிக்கு சேவல் தலையுடன் உரு மாறி வலம் வந்த மகிஷாசூரனை அம்மன் வதம் செய்தாா். கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா். 

இதையடுத்து கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரா் கோயில், அபிஷேக மேடை, கோயில் கலையரங்கில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலையில் அம்மன் பூஞ்சப்பரத்தில் திருவீதியுலா புறப்பட்டு மாலையில் கோயிலை வந்தடைந்தாா். இதையடுத்து பக்தா்கள் காப்பு அவிழ்த்து வேடங்களைக் களைந்து விரதத்தை நிறைவுசெய்தனா். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் தி.பரஞ்ஜோதி, உதவி ஆணையா் சு.ரோஜாலி சுமதா,நிா்வாக அதிகாரி கே.பரமானந்தம், ஆலயப் பணியாளா்கள் செய்திருந்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory