» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு திடீர் மயக்கம்

புதன் 9, அக்டோபர் 2019 5:12:08 PM (IST)

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கெண்டிருந்த அமைச்சர் கடம்பூர் ராஜு திடீரென மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு இன்று மாலை பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அமைச்சர்கள் நலம் விசாரிப்பு

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் கடம்பூர் ராஜூவை, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ,சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  கூட்டுறவுத்துறை  அமைச்சர் செல்லூர் ராஜு,வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ,உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உட்பட பல்வேறு அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு  வருகை தந்து  உடல்நலம் குறித்து விசாரித்து சென்றனர். 

மேலும் மாலை 6 மணியளவில் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசி வாயிலாக அமைச்சர் உடல் நலம் குறித்து விசாரித்தார். முழு உடல் பரிசோதனை செய்திடுமாறு உத்தரவிட்டார் தற்போது அமைச்சர் கடம்பூர் ராஜு உடல் நலத்துடனும் ஆரோக்கியத்துடன் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

ராஜாOct 10, 2019 - 07:25:42 PM | Posted IP 108.1*****

போற இடம் பூரா அடிச்சு விரட்டுனர பாவம் என்ன செய்வார். அதான் ஆஸ்பத்திரி போய் படுத்துட்டார்.

தமிழ்ச்செல்வன்Oct 9, 2019 - 08:20:42 PM | Posted IP 162.1*****

இடைத்தேர்தலுக்கு வாய்ப்பிருக்கா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesNalam Pasumaiyagam

Anbu CommunicationsCSC Computer EducationThoothukudi Business Directory