» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் விண்வெளி கண்காட்சி : ஆட்சியர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார்

புதன் 9, அக்டோபர் 2019 4:47:19 PM (IST)தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் உலக விண்வெளி வார விழாவையொட்டி நடைபெற்ற விண்வெளி கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்து பார்வையிட்டார்.

திருநெல்வேலி மகேந்திரகிரி இஸ்ரோ உந்தும வளாகம் மற்றும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி இணைந்து உலக விண்வெளி வார விழாவையொட்டி விண்வெளி கண்காட்சி தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  கலந்துகொண்டு விண்வெளி கண்காட்சியினை குத்துவிளக்கு ஏற்றிவைத்து திறந்து வைத்து பார்வையிட்டார். விழாவில் ஆட்சியர் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் அக்டோபர் 4 முதல் 10ம் தேதி வரை உலக விண்வெளி வார விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தலைப்பில் இந்த வார விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களிடையே விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

இன்று தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வளாகத்தில் உலக விண்வெளி வார விழாவையொட்டி விண்வெளி கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. இந்த கண்காட்சி 9, 10, 11 ஆகிய 3 நாட்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள். பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது.  இந்த கண்காட்சியில் விண்கலத்தில் பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், PSLV, GSLV உள்ளிட்டவை குறித்து விளக்கமும் அளிக்கப்படுகிறது. இன்றைய செய்தித்தாளில் 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசுக்காக அறிவித்துள்ளார்கள். இதில் ஒரு விஞ்ஞானி சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களையும் தாண்டி ஆராய்ச்சி செய்துள்ளார்கள். இஸ்ரோ தற்போது சந்திராயன் 2 விண்கலன் ஏவி 98 சதவீதம் வெற்றி கண்டுள்ளார்கள். இது இந்திய நாட்டிற்கே மிகப்பெரிய பெருமை சேர்த்துள்ளது. 

தசராவையொட்டி இக்கண்காட்சியும், புத்தக கண்காட்சியும் நடத்தப்படுகிறது. பொதுமக்கள், மாணவ, மாணவிகள் இவைகளை கண்டுகளித்து பயன்பெற வேண்டும். டாக்டர் அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று இளைஞர்களிடையே தெரிவித்தார்கள். எனவே பள்ளி மாணவ, மாணவியர்கள் சிறுவயதில் இருந்தே தங்களது லட்சியத்தை அடைய விடாமுயற்சி மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவ, மாணவியரிடையே ஒவ்வொரு திறமை இருக்கும். அதனை வெளிக்கொண்டு வந்து சமுதாயத்திற்கு பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பேசினார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இஸ்ரோ முன்னாள் இயக்குநர் பத்மஸ்ரீ ஆர்.எம்.வாசகம் பேசியதாவது: இந்தியா 2022ம் ஆண்டில் 3 விஞ்ஞானிகளை விண்வெளி ஆராய்ச்சிக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. உலக அளவில் 2030ல் 1050 விண்வெளி திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு 450 மில்லியன் டாலர் செலவாகும், இதில் 30 மில்லியன் டாலர் செலவுவரை இந்தியாவில் மேற்கொள்ளவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்pல் குலசேகரன்பட்டினத்தில் ஏவுதளம் அமைப்பதற்காக இடங்களை கண்டறியப்பட்டு அரசுக்கு அனுப்பி வைத்து பரிசீலனை நிலையில் உள்;ளது. மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி இஸ்ரோ நிறுவனம் ஆராய்ச்சிகளுக்கு வழங்கி வருகிறது. விண்வெளியில் பயணம் செய்ய ஒரு மனிதன் சுமார் 30 கிலோ அளவிலான பொருட்களை எடுத்துசெல்ல வேண்டும். பூமியில் இருந்து மனிதன் சுமார் 3.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை தொலைவில் உள்ள நிலாவுக்கு சென்றுதான் அங்கிருந்து பிற கிரகங்களுக்கு செல்லும் வகையிலான திட்டங்கள் பிற்காலத்தில் உருவாக்கப்படவுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவ, மாணவியர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இன்று தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. இந்த வருடம் நடைபெறும் கண்காட்சி 20வது விண்வெளி வார விழா கண்காட்சி ஆகும். இந்த விண்வெளி கண்காட்சியினை பள்ளி மாணவ, மாணவியர்கள் நன்றாக பார்த்து அறிவியல் தொழில்நுட்பங்களை தெரிந்துகொள்ள வேண்டும். மேலும், தங்களது நண்பர்களை அழைத்து வந்து அவர்களும் இந்த கண்காட்சியினை பார்த்து பயன்பெறும் வகையில் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். உலக அளவில் தங்களது பெயர் நிலைத்து நிற்கும் வகையில் நாட்டிற்காக பாடுபட வேண்டும் என இஸ்ரோ முன்னாள் இயக்குநர் பேசினார்.

அதனைத்தொடர்ந்து அறிவியல் புதுமை செய் என்ற தலைப்பிலான புத்தகத்தினை இஸ்ரோ முன்னாள் இயக்குநர் பத்மஸ்ரீ ஆர்.எம்.வாசகம் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் தலைவர் எக்ஷ்போ கமிட்டி ஜெபசிகாமணி, இயக்குநர் ஐPசுஊ மூக்கையா, அசோசியேட் இயக்குநர் அழகுவேலு, துணை இயக்குநர் லுயிஸ் சாம் டைடஷ், தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி செயலாளர் சொக்கலிங்கம், தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி முதல்வர் வீரபாகு மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

maniOct 9, 2019 - 06:19:45 PM | Posted IP 162.1*****

Nantri Varverga Thakathu

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu Communications

Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory