» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நிர்வாகத்திற்கு தடை: 2 மாதத்திற்குள் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதன் 9, அக்டோபர் 2019 4:27:49 PM (IST)தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நிர்வாகத்தை கலைத்துவிட்டு 2 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முன்னாள் செயலாளர் சி.எஸ். ராஜேந்திரன், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் இயக்குநர் டி.ஆர். தமிழக அரசன் மற்றும் நாடார் மகமை நிர்வாகிகள் தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பிற்பட்ட சாதாரண மக்களும் உயர்கல்வி பெற வேண்டும் என்ற உயரிய நோகத்தில் 1966 ஆம் ஆண்டில் தூத்துக்குடி கல்விகுழு சார்பில் காமாராஜர் கல்லூரி தொடங்கப்பட்டது. 

இந்த கல்லூரியானது தூத்துக்குடி வட திசை காரப்பேட்டை நாடார் மகமை சங்கம், விருதுநகர் நாடார் மகிமை, தூத்துக்குடி நாடார் மகிமை, திருமங்கல நாடார் மகமை, அருப்புக்கோட்டை நாடார் மகமை சங்கங்கள் ஒன்றிணைந்து 52பேரை தேர்ந்தெடுத்து அதன் மூலம் காமராஜர் கல்லூரி நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது. 1966ஆம் ஆண்டு முதல் 2015 வரை சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், நிர்வாகத்தில் 4 உறுப்பினர்கள் மட்டுமே கொண்ட ஸ்பின்னிங் மில் நிறுவனத்தினர் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, கல்விக்குழு விதிமுறைகளுக்கும் சட்டத் திட்டங்களுக்கு எதிராக தன்னிச்சையாக தேர்தல் நடத்தி கல்லூரி முதல்வரை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். 

அனைத்து சமுதாய மாணவர்களும் குறைந்த கல்விக் கட்டணத்தில் கல்வி பெறும் இயங்கி வந்த கல்லூரியை ஏழை எளிய மாணவர்கள் கல்வி கற்க முடியாத அளவிற்கு கல்விக் கட்டணத்தை உயர்த்தி விட்டனர். மேலும் கல்லூரியை ஒரு வர்த்தக நிறுவனமாக மாற்றிவிட்டனர். இதை எதிர்த்து நாடார் மகமைகள் உச்சநீதிமன்றம், கல்லூரி கல்வி இயக்குநரகம், மாவட்ட பதிவாளர் ஆகியோரிடம் புகார் அளித்து கடந்த 5 வருட காலமாக சட்டப் போராட்டம் நடத்தி வந்தன. 

இறுதியாக மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், காமராஜ் கல்லூரி நிர்வாகத்தை கலைத்துவிட்டு வழக்கறிஞர் சொர்ணலதாவை வழக்கறிஞர் ஆணையராக நியமித்து 2 மாதத்திற்குள் கல்விக்குழுமத்திற்கு தேர்தல் நடத்தவும், அதுவரை வழக்கறிஞர் ஆணையரே கல்லூரி நிர்வாகத்தை கவனிக்கவும் உத்தவிட்டனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். பேட்டியின் போது நாடார் மகமைகளைச் சேர்ந்த எம்எஸ்ஏ பீட்டர் ஜெபராஜ், பிஎஸ்டிஎஸ்டி வேல்சங்கர், எஸ்கேஎஸ்சி நடராஜன், ஏஆர்ஏஎஸ் தனபாலன், சுசிராஜன், நிர்மல் வேல், எம்எஸ்பி தேன்ராஜ், பிஎம் செல்வராஜ், என்டி செல்வராஜ், பட்டுராஜ், ஆகியோர் பேட்டியின்போது உடனிருந்தனர். 


மக்கள் கருத்து

மீனாOct 10, 2019 - 04:39:24 PM | Posted IP 162.1*****

இவர்கள் அரசியல் பண்ண கல்லூரியின் பெயர்தான் கிடைத்ததா ?

சுகன்யாOct 10, 2019 - 04:35:57 PM | Posted IP 108.1*****

தற்போதுதான் சுயநிதி பிரிவில் பயிலும் மாணவ மாணவியர் கல்லூரியில் படிக்கிறோம் என்ற நினைப்பில் உள்ளோம் அது பொறுக்கவில்லை போலும் இவர்களுக்கு தானும் நல்லது பண்ண மாட்டாங்க நல்லது பண்றவங்களையும் விட மாட்டாங்க

ராஜேஷ்Oct 10, 2019 - 04:32:07 PM | Posted IP 173.2*****

நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டாலும் சில சில்லறைகள் ஓசை எழுப்பதன் செய்யும்,

விக்டர்Oct 10, 2019 - 01:10:49 PM | Posted IP 108.1*****

நிர்வாகம் யாராக இருந்தால் நமக்கென்ன கல்லூரி இயங்குவதின் நோக்கம் நிறைவேயினால் அதுவே போதும் மற்றவையெல்லாம் வெறும் நிர்வாக அரசியல் அது அவர்கள் தலைவலி

சரவணன்Oct 10, 2019 - 01:03:42 PM | Posted IP 162.1*****

கல்லூரி தற்போது தான் கல்லூரியாக இருக்கிறது வெளித்தோற்றத்திலும் சரி கல்விப்பணியிலும் சரி..

ராமன்Oct 10, 2019 - 12:56:29 PM | Posted IP 162.1*****

கல்லூரி ஒழுங்காக இயங்குவது சிலருக்கு பிடிக்கவில்லை அதன் வெளிப்பாடு, முன்னேற்றம் பிடிக்காதவர்கள் புறம் பேசத்தான் செய்வார்கள்

ஜெபசிங் ஜெயபால், கத்தார்Oct 10, 2019 - 11:25:30 AM | Posted IP 108.1*****

எங்க பிரின்சிபால் Prof செல்வராஜ் சார் தான் வரணும். அப்பத்தான் எல்லாம் சரியாகும்.

ப்ரீத்திOct 10, 2019 - 11:14:48 AM | Posted IP 162.1*****

உமா & சித்ரா என்று 2பேர் ஆபீஸ் அவங்க கன்ட்ரோல் வச்சுருக்காங்க.

பொன்மாணிக்கம்Oct 9, 2019 - 06:00:30 PM | Posted IP 162.1*****

இன்று சில பேராசிரியர்கள் மாணவர்களை சரியாக மதிப்பதில்லை , உதவியோ செய்வதில்லை எல்லாம் பணத்திமிரு

ஆமாம்Oct 9, 2019 - 05:56:40 PM | Posted IP 162.1*****

எல்லாம் காசு பணம் துட்டு ... பணவெறி கூட ..

ஆசீர். விOct 9, 2019 - 05:00:04 PM | Posted IP 172.6*****

இந்த நிர்வாக கருத்து வேறுபாட்டால் இந்த கல்லூரியில் ஒரு முதல்வரே ராஜினாமா செய்து விட்டு போய் விட்டதாக சொன்னார்கள்

தமிழ்ச்செல்வன்Oct 9, 2019 - 04:57:43 PM | Posted IP 162.1*****

நன்றாக இயங்கி கொண்டிருந்த இந்த கல்லூரி இபோது சாதி வெறி மற்றும் மத வெறிக்குள் சிக்கி சின்னாபின்னமாகி போய் விட்டது. காமராஜ் கல்லூரிக்குள் எதுக்குடா விவேகானந்தர் சிலை?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Black Forest Cakes


Anbu Communications
Thoothukudi Business Directory