» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தாயை தாக்கியதாக ரவுடி கைது

புதன் 9, அக்டோபர் 2019 11:21:26 AM (IST)

தூத்துக்குடியில் வழக்கு செலவுக்காக பணம் கேட்டு பெற்ற தாயை கம்பால் தாக்கியதாக பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மிலலர்புரம் சின்னமணி நகரைச் சேர்ந்தவர் ஜெயராம் மகன் சுதந்திர ராஜ் (28). பிரபல ரவுடியான இவர் மீது 2 கொலை வழக்கு உட்பட 13 வழக்குகள் உள்ளன. தற்போது ஜாமீனில் வந்துள்ள அவர், வழக்கு செலவுக்காக தனது தாயார் தங்க மாரியம்மாளிடம் ரூ.10ஆயிரம் கேட்டுள்ளார். அவர் பணம் தரமறுக்கவே கம்பால் தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த தங்க மாரியம்மாள், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தென்பாகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப் பதிந்து, சுதந்திர ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes




CSC Computer Education

Nalam Pasumaiyagam


Anbu Communications



Thoothukudi Business Directory