» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புத்தகத் திருவிழாவில் 3 நாட்களில் ரூ.8.8 லட்சம் புத்தகம் விற்பனை : ஆட்சியர் தகவல்

செவ்வாய் 8, அக்டோபர் 2019 3:28:12 PM (IST)

தூத்துக்குடி புதிய பேரூந்து நிலைய மைதானத்தில் நடைபெறும் புத்தகத்திருவிழா கண்காட்சி 3 தினங்களில் 9,915 புத்தகங்கள் ரூ.8,80,980 மதிப்பில் புத்தகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி புதிய பேரூந்து நிலைய மைதானத்தில், அக்டோபர் 05 முதல் 13 வரை புத்தகத்திருவிழா கண்காட்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் நேஷனல் புக் டிரஸ்ட் புதுடில்லி, இணைந்து சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. புத்தகத்திருவிழாவினை 5.10.2019 அன்று, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்ற விழாவில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ திறந்து வைத்தார். 

இந்த புத்தகத்திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டு, புத்தகங்கள் பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பார்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புத்தகத்திருவிழாவில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு புகைப்படக்காட்சி, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மகளிர் திட்டம், வேளாண்மைத்துறை உள்ளிட்ட அரசு துறைகளை சார்ந்த கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத் திருவிழா காலை 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படுகிறது. 

இந்த புத்தகத்திருவிழாவில் விற்பனை செய்யப்படும் புத்தகங்களுக்கு விற்பனை விலையிலிருந்து 10 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது.மேலும், இந்த புத்தகத்திருவிழாவிற்கு வருகைத்தரும் பொது மக்களுக்கு பொழுது போக்கு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு நாளும் பல்வேறு தலைப்புகளில் சிறந்த எழுத்தாளர்கள், சிறப்பு வாய்ந்த பேச்சாளர்கள் ஆகியோர்கள் உரையாற்றும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மேலும், பிற்பகல் 3.00 மணி முதல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த புத்தகத்திருவிழாவிற்கு வருகைத்தரும் பொது மக்களுக்கு மைதானத்தில் உணவு அரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

துவக்கநாளான 5.10.2019 அன்று 3,794 மாணவ, மாணவிகளும், 170 ஆசிரியர்களும், 2,450 பொது மக்களும் பார்வையிட்டனர்.6.10.2019 அன்று 4,150 பொது மக்களும், 7.10.2019 அன்று 3,120 பொது மக்களும் என 3 தினங்களில் 13,684 நபர்கள் பார்வையிட்டுள்ளனர். 5.10. 2019 அன்று ரூ.1.64 இலட்சம் மதிப்பில் 1,739 புத்தகங்களும், 6.10.2019 அன்று ரூ.3.84 இலட்சம் மதிப்பில் 4,662 புத்தகங்களும், 7.10.2019 அன்று ரூ.3.34 இலட்சம் மதிப்பில் 3,514 புத்தங்களும் என 3 தினங்களில் புத்தகத்திருவிழா கண்காட்சியில் 9,915 எண்ணிக்கையில் ரூ.8,80,980 மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

4வது நாளான இன்று (08.10.2019) மாலை 5.00 மணியளவில் கலைமாமணி பொ.கைலாசமூர்த்தி குழுவினரின் ஒயிலாட்டம் நிகழ்ச்சியும், மாலை 6.00 மணிக்கு பல்லுயிர் ஓம்புதல் பண்பு என்ற தலைப்பில் பாரதி கிருஷ்ணகுமார் அவர்களும், சார் ஆட்சியர், இராணிப்பேட்டை க.இளம்பகவத், அவர்களும் உரையாற்றயுள்ளார்கள். உயிர்தமிழ் என்ற தலைப்பில் கவிஞர்.அறிவுமதி சிறப்புரையாற்ற உள்ளார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTDBlack Forest Cakes
Thoothukudi Business Directory