» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஆவின் புதிய அலுவலகம் திறப்பு விழா

செவ்வாய் 8, அக்டோபர் 2019 3:19:38 PM (IST)தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகத்தை  பால்வளத்துறையின் இயக்குநர் சி.காமராஜ், திறந்து வைத்தார்.

தூத்துக்குடி பால விநாயகர் கோவில் தெருவில் புதிய கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா இன்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், பால்வளத்துறையின் இயக்குநர் சி.காமராஜ், கலந்து கொண்டு, கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்தார். மேலும், பால்வளத்துறையின் இயக்குநர் ஆவின் பொருட்கள் விற்பனையை துவக்கி வைத்தார். இவ்விழாவில் தூத்துக்குடி மாவட்ட பால்வளத் தலைவர் என்.சின்னத்துரை வரவேற்புரையாற்றினார்.

இவ்விழாவில், பால்வளத்துறையின் இயக்குநர் சி.காமராஜ், பேசியதாவது:- தூத்துக்குடி மாவட்ட ஆவின் நிறுவனம் திருநெல்வேலி மாவட்டத்தோடு ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்தது. இதை பிரித்து தூத்துக்குடி மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட போவதாக தமிழ்நாடு முதலமைச்சர் 17.07.2019 அன்று சட்டப்பேரவை 110 விதியின் கீழ் அறிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து 22.08.2019 அரசாணை வெளியிடப்பட்டு 26.08.2019 அன்று தூத்துக்குடி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் புதிதாக பதிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் திருநெல்வேலியிலிருந்து பிரிக்கப்படும் பொழுது நாள் ஒன்றுக்கு சுமார் 26,000 லிட்டர் பால் 160 பிரதம பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. அதேபோல் பால் விற்பனை சுமார் 185 முகவர்கள் மூலம் 21,000 லிட்டர் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பொது மக்கள் பயன் பெறும் வகையில் 24 மணிநேரமும் செயல்படும் 5 பாலகங்கள் ஆறுமுகநேரி, ஆழ்வார்திருநகரி, கோவில்பட்டி, மற்றும் தூத்துக்குடியில் இரண்டு பாலகங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது விற்பனை அதிகரித்து 23,000 ஆயிரத்தை எட்டியுள்ளது. 

அதேபோல் பால் உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டு 30 ஆயிரத்தை எட்டியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 19 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இம்மாவட்டத்தை பொறுத்த வரை பால் தேவை அதிகமாக இருப்பதால் விற்பனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தாலுகா, நகராட்சி, பேரூராட்சி, பேரூந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஆவின் பாலககங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு தென்மாவட்டங்களில் பால் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. தற்போது 30 ஆயிரம் லிட்டர் விற்பனை செய்வதை ஒராண்டுக்குள் 60 ஆயிரமாக உயர்த்திடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

குறிப்பாக, பள்ளி மாணவ. மாணவியர்கள், பொது மக்கள் தரமான ஆவின் பால் கிடைப்பதற்கும், குறைந்த விலையில் தரமான ஆவின் பொருட்கள் எளிதில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் பால்வளத்துறை அமைச்சர் புதிய ஆவின் பொருட்கள் அறிமுகம் செய்து வருகிறார்கள். இந்த பொருட்கள் அனைத்தும், அனைத்து மாவட்டங்களில் கிடைக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஆவின் பொருட்கள் இலங்கை, சிங்கப்பூர், கத்தார், ஹாங்ஹாங் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. விரைவில் துபாய் நாட்டிற்கு ஆவின் பொருட்கள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, பொது மக்கள் குறைந்த விலையில் விற்கப்படும் தரமான ஆவின் பொருட்களை வாங்கி பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என பால்வளத்துறை இயக்குநர் பேசினார்.

இவ்விழாவில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், திருநெல்வேலி மாவட்ட ஆவின் தலைவர் சுதாபரமசிவம், தூத்துக்குடி பொது மேலாளர் ஆவின் இ.திரியேகராஜ் தங்கையா, பொது மேலாளர்கள் (திருநெல்வேலி) ரெங்கநாதன், (கன்னியாகுமரி) தினேஷ்பாபு, பொது மேலாளர் (விற்பனை) புகழேந்தி) தூத்துக்குடி விற்பனை மேலாளர் சாந்தி, துணை மேலாளர்கள் (தூத்துக்குடி) சுரேஷ், (திருநெல்வேலி) சித்ராதேவி முக்கிய பிரமுகர்கள் அமிர்தகணேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu CommunicationsBlack Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory