» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி மோதி வாலிபர் சாவு

செவ்வாய் 8, அக்டோபர் 2019 11:49:15 AM (IST)

தூத்துக்குடி துறைகத்தில் லாரி மோதியதில் ஒப்பந்த ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அண்ணாநகர் காலனியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் மகன் அந்தோணி முத்து (25). இவர் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நிலக்கரி கப்பல் தளத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலைபார்த்து வந்தார். இவர் நேற்று இரவு பணியில் இருந்தபோது, டீ குடிப்பதற்காக வெளியே நடந்து வந்துள்ளார். அப்போது, நிலக்கரி ஏற்றி வந்த லாரி அவர் மீது லாரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தெர்மல் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவலிங்ககுமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Black Forest Cakes

Anbu Communications


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory