» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காந்தியடிகளின் பிறந்தநாளான்று சிறப்பு நிகழ்ச்சிகள் : தமிழக அரசுக்கு மஜத கோரிக்கை

ஞாயிறு 22, செப்டம்பர் 2019 9:33:48 PM (IST)

காந்தியடிகளின் 150வது பிறந்தநாளான அக் 2ல் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் எம்.சொக்கலிங்கம், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விபரம்: உலக வரலாற்றில் அகிம்சை வழியில் நம் நாட்டிற்கு சுதந்திரம் பெற்று தந்தவர் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள். அவரது 150வது பிறந்தநாள் வருகிற அக்டோபர் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. மேலும் காந்தியடிகளின் வழியில் அரசியல் நடத்தி, இந்திய விடுதலை போராட்ட காலத்தில் 3000 நாட்கள் சிறைவாசம் அனுபவித்து, 10 ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்து பொற்கால ஆட்சி நடத்திய பாரதரத்னா காமராஜரின் நினைவு நாளும் அன்றைய தினம்தான் கடைபிடிக்கப் படுகிறது.

எனவே, வருகிற அக்டோபர் 2ம் நாளன்று, அரசு மற்றும் "உள்ளாட்சி நிர்வாகங்களின் அனுமதி பெற்று நிறுவட்டு உள்ள காந்தி மற்றும் காமராஜரின் சிலைகளை கழுவி, சுத்தம் செய்து, அவற்றுக்கு அரசு மற்றும் "உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், "உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்விச்சாலைகள் முதலானவற்றில் காந்திஜி, காமராஜ் ஆகியோரின் திருவுருவ படங்களை நிரந்தரமாக வைத்து, மாணவ, மாணவிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
 
அதுதவிர, தேசத்தந்தை காந்தியடிகள், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் அப்பழுக்கற்ற தியாக வாழ்க்கையை பற்றி, எல்லா தரப்பு மக்களும், குறிப்பாக இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளும் வகையில் சொற்பொழிவு, பட்டிமன்றம் முதலான சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்திட ஏற்பாடு செய்ய வேண்டும். காந்தி, காமராஜர் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகங்களை தமிழக அரசு வெளியிட்டு, அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் நூலகங்கள் மற்றும் கல்விச்சாலைகளில் அப்புத்தகங்கள் கிடைத்திட ஆவண செய்யுமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest CakesFriends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory