» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் லாரி கடத்தல் : இளைஞர் கைது

ஞாயிறு 22, செப்டம்பர் 2019 12:32:23 PM (IST)

தூத்துக்குடியில் லாரியை கடத்தி ஓட்டி சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் மேலபிள்ளையார்குளம் பகுதியினை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் சுப்பிரமணியன் (40). லாரி டிரைவர். தூத்துக்குடி துறைமுகத்தில் லாரியில் சரக்குகளை இறக்கிவிட்டு மீண்டும் லாரியில் தூத்துக்குடி மதுரை பைபாஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். சர்வீஸ் ரோட்டில் வண்டியினை நிறுத்தி விட்டு தேநீர் அருந்த சென்றாராம். பின்னர் வந்து பார்த்த போது லாரியை காணவில்லை என கூறப்படுகிறது. 

இதனால் சுப்பிரமணியன் ஒரு பைக்கில் மதுரை ரோட்டில் சென்று பார்க்கும் போது அவரது லாரியை வேறொருவர் ஓட்டி சென்றது தெரிய வந்தது.உடனே அவர் லாரியை மறித்து நிறுத்தி அதை ஓட்டி சென்றவரை சிப்காட் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் லாரியை திருடி ஓட்டி சென்றது கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த பரமசிவன் மகன் கண்ணன் (30) என தெரிய வந்தது. அவரை கைது செய்து லாரியை போலீசார் மீட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory