» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மகாத்மா காந்திக்கும் பாஜகவுக்கும் துப்பாக்கி உறவு : காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி பேட்டி

ஞாயிறு 22, செப்டம்பர் 2019 12:18:16 PM (IST)மகாத்மா காந்திக்கும் பாஜகவுக்கும் துப்பாக்கி உறவுதான் உண்டு என தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கன்னியாகுமரி செல்வதற்காக இன்று காலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அவர் கூறியதாவது.மகாத்மா காந்தியின் உடைய 150வது பிறந்தநாள் மிகவும் சிறப்பாக கொண்டாட காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்துள்ளோம். கன்னியாகுமரியில் அதற்கான மிகப்பெரிய பாதயாத்திரை அக்டோபர் இரண்டாம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. மகாத்மா காந்தி பிறந்தநாளை பாஜகவினர் கொண்டாடுவது குறித்து கேட்டதற்கு அவர்கள் எல்லாவற்றையுமே புதிதாக செய்கிறார்கள். காந்திக்கும் எங்களுக்கும் தொப்புள்கொடி உறவு உண்டு அவர்களுக்கு துப்பாக்கி உறவுதான் உண்டு இதுதான் அவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம் .

இந்திய சுதந்திரத்திற்காக பாரதிய ஜனதா கட்சி எதுவும் செய்யவில்லை . ஆனால் ஜனநாயகம் அவர்களை அங்கீகரித்து இருக்கிறது . நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் அபார வெற்றி பெறுவோம் . நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் . இடைத்தேர்தலில் பணம் வென்றதாக சரித்திரம் கிடையாது. பணம் எப்போதும் வென்றதாக சரித்திரம் இல்லை. பணம் முதலில் போய் சேராது சேவைதான் மக்களிடம் போய் சேரும் . எனவே அதை மையமாக வைத்து நாங்கள் இடைத்தேர்தலில் செயல்படுவோம் .

தமிழகத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட நிதி ஆதாரங்கள் மத்திய அரசிடம் குவிந்து கிடக்கிறது அதையெல்லாம் இவர்களால் பெற்றுத்தர முடியவில்லை. மத்திய அரசாங்கத்தை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. குறிப்பாக நீட் தேர்வு குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பி விட்டார்கள் மறுபடி திரும்பி வந்துவிட்டது அதை கூட இவர்கள் இரண்டு ஆண்டு காலம் மறைத்து வைத்திருந்தார்கள் . இதுபோன்ற அடிமையான அரசாங்கம் தமிழகத்திற்கு தேவையா ? என மக்கள் சிந்திக்க அரசாங்கத்தை அகற்றிவிட்டு ஒரு நல்ல மக்கள் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் எங்களுடைய பிரச்சாரமாக இருக்கும் .

பொருளாதாரம் மிகப்பெரிய சீரழிந்து விட்டது . இதுவரை 4 லட்சம் மோட்டார் வாகன தொழிலாளர்கள் வேலை இழந்து இருக்கிறார்கள் .காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை கொடுத்தால்தான் பொருளாதாரம் மேம்படும் .  இடைத்தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி .  மோடி என்பது ஒரு மாயை என்றும் அது தற்போது உடைந்து கொண்டே இருக்கிறது. காங்கிரசால் மட்டுமே நிலையான ஆட்சியை தர முடியும்.தூத்துக்குடியில் 19 கொலைகள் நடக்கும் வரை மாவட்ட நிர்வாகம் என்ன செய்வது காவல்துறை என்ன செய்தது என கேள்வி எழுப்பினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory