» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கூட்டுறவு நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா

ஞாயிறு 22, செப்டம்பர் 2019 8:44:43 AM (IST)தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மற்றும் கூட்டுறவு அச்சகம் நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு மற்றும் பாராட்டு விழா அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் நடைபெற்றது.
 
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில், மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மற்றும் கூட்டுறவு அச்சகம் நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு மற்றும் பாராட்டு விழா, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், கூட்டுறவுத்துறை தேர்தலில் வெற்றி பெற்ற, மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் தலைவர் தனவதி, துணைத் தலைவர் தனராஜ், கூட்டுறவு அச்சகத் தலைவர் அன்புராஜ், துணைத்தலைவர் இராஜேந்திரன் மற்றும் தலா 20 நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பாராட்டுக்களை தெரிவித்தார். 

இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன் (திருவைகுண்டம்), சின்னப்பன் (விளாத்திகுளம்) ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், துணைத் தலைவர் கணேஷ் பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் / தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் (பொ) இந்துமதி, கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் அந்தோணி பட்டுராஜ், முக்கிய பிரமுகர்கள் இ.பி.ரமேஷ், ஞானகுருசாமி ஏசாதுரை மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTDAnbu Communications

Thoothukudi Business Directory