» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் இளம்பெண் உட்பட 2 பேர் தற்கொலை

ஞாயிறு 15, செப்டம்பர் 2019 12:34:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இளம்பெண் உட்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். 

தூத்துக்குடி குறுக்குச்சாலை அருகே பெரியநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் மகன் சுப்புராஜ் (28). காெத்தனாராக உள்ளார். இவருக்கு அவரது தந்தை திருமண ஏற்பாடு செய்து வந்தாராம். ஆனால் சுப்புராஜ்க்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. ஆகையால் விரக்தியடைந்த சுப்புராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் ஓட்டபிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்க சேகர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.

மற்றொரு சம்பவம்

பசுவந்தனை அருகே வடக்கு ஆவாரங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மகராஜன். இவரது மனைவி முத்து சுடலைமணி (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மகராஜன் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. ஆகையால் விரக்தியடைந்த முத்து சுடலைமணி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து காெண்டார். சிறிது நேரத்தில் உடல் கருகி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  இது குறித்த புகாரின் பேரில் பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Anbu Communications


Black Forest Cakes





Thoothukudi Business Directory