» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பெண்ணிடம் 17 பவுன் நகைகள் பறிப்பு : மர்ம நபர்கள் கைவரிசை

ஞாயிறு 15, செப்டம்பர் 2019 10:08:39 AM (IST)

தூத்துக்குடியில் பெண்ணிடம் 17 பவுன் நகைகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி, முத்தையாபுரம் தெர்மர் நகரைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மனைவி ஜெகதீஸ்வரி (42). இவர் நேற்று மாலை அருகில் உள்ள ஓம்சக்தி நகரில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 17 பவுன் மதிப்புள்ள 2 செயின்களை பறித்துச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.4லட்சம் ஆகும். இதுகுறித்து புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Anbu Communications


Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory