» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தீக்குளித்த இளம்பெண் மரணம்: போலீஸ் விசாரணை

ஞாயிறு 15, செப்டம்பர் 2019 9:31:01 AM (IST)

கயத்தாறு அருகே தீக்குளித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறையடுத்த வடக்கு கோணார்கோட்டை கீழக்காலனியைச் சேர்ந்தவர் ரோசிப் மகள் சண்முகத்தாய் (18). கடந்த சில நாள்களாக இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரை மீட்ட பெற்றோர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD
Anbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory