» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம்: 1,794 வழக்குகளுக்கு தீர்வு

ஞாயிறு 15, செப்டம்பர் 2019 9:20:47 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற அமர்வு மூலம் 1,794 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ.5 கோடியே 83 லட்சத்து 18 ஆயிரத்து 445 வரை தீர்வு காணப்பட்டது. 

ஆண்டுக்கு 4 முறை தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது. தூத்துக்குடியில் மாவட்ட முதன்மை நீதிபதி எம். சுரேஷ் விஸ்வநாத் தலைமை வகித்து நீதிமன்ற அமர்வை தொடங்கிவைத்தார். மாவட்டம் முழுவதும் 14 அமர்வுகள் மூலம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தூத்துக்குடியில் 1,562 வழக்குகளும், கோவில்பட்டி நீதிமன்றத்தில் 1,015 வழக்குகளும், திருச்செந்தூர் நீதிமன்றத்தில் 464 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் 262 வழக்குகளும், சாத்தான்குளம் நீதிமன்றத்தில் 209 வழக்குகளும், விளாத்திகுளம் நீதிமன்றத்தில் 193 வழக்குகளும் என மொத்தம் 3 ஆயிரத்து 705 வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில், மொத்தம் 1,794 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, அதன் மூலம் ரூ.5 கோடியே 83 லட்சத்து 18 ஆயிரத்து 445 வரை தீர்வு காணப்பட்டுள்ளது. முடிக்கப்பட்ட வழக்குகளுக்கான ஆணை சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கப்பட்டது.  தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நீதிபதிகள் குமார் சரவணன், சிவஞானம், ஹேமா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணை க்குழு செயலரான சார்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu CommunicationsBlack Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory