» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அம்மா மருந்தகத்தில் திடீர் தீவிபத்து!!

புதன் 11, செப்டம்பர் 2019 12:32:39 PM (IST)தூத்துக்குடியில் அம்மா மருந்தகத்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. 

தூத்துக்குடி டூவிபுரத்தில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலைக்குச் சொந்தமான அம்மா மருந்தகம் இயங்கி வருகிறது. நேற்று இரவு விற்பனை முடிந்த பின்னர் மருந்தகத்தை பூட்டிச் சென்றுள்ளனர். இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் கடையில் இருந்து திடீரென புகை வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் பண்டகசாலை பதிவாளருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அதிகாரிகள் வந்து கதவைத் திறந்து பார்த்தபோது கடைக்குள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது. 

மேலும், தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இன்வெர்டரில் ஏற்பட்ட மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இருந்த போதிலும் மருந்தகத்தில் இருந்த ஏராளமான மருந்துகள் மற்றும் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. மொத்தம் ரூ.1½ லட்சம் மதிப்பிலான மருந்து மற்றும் பொருட்கள் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன் பார்வையிட்டார். 


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Sep 12, 2019 - 10:14:22 AM | Posted IP 162.1*****

எனக்கு தெரிந்து இதுவரை என்றுமே எந்த மருந்து கடையிலும் தீ பிடித்தது இல்லை. முதன்முறையாக அம்மா மருந்து கடையில் தீ பிடித்திருக்கிறது. எவ்வளவு கள்ள கணக்கு எழுதிட்டு இந்த டிராமா போடுறானுகளோ தெரியல!?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory