» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கல்லூரி மாணவி உட்ட 2பேர் மாயம்

புதன் 11, செப்டம்பர் 2019 11:14:38 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வெறு பகுதிகளில் கல்லூரி மாணவி, மற்றும் பள்ளி மாணவர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

தூத்துக்குடி பிரையன்ட் நகர் 12வது தெருவைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் நவீன் பிரேம் (15), ரெங்கநாதபுரத்தில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 8ம் தேதி சிறப்பு வகுப்பு இருப்பதாக கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளான். பின்னர் வீடுதிரும்ப வில்லையாம். பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் தெரியவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

கல்லூரி மாணவி மாயம்

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகேயுள்ள சந்தையடியூர் கிராமம், கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் மூக்கன். இவரது மகள் மகாலலெட்சுமி (19), பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 9ம் தேதி கல்லூரிக்கு சென்றவர் விடுதிரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்து தகவல் தெரியவில்லை. இதுகுறித்து புகாரின்பேரில் செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Anbu Communications

Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD






Thoothukudi Business Directory