» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பேருந்து நிலையத்தில் ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை : போலீசார் விசாரணை

புதன் 11, செப்டம்பர் 2019 8:38:51 AM (IST)நாசரேத் பேருந்து நிலையத்தில் பள்ளி ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள குமாரலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் சேகர் (53),. இவருடைய மனைவி லதா (48). இவர்களுக்கு அருண்குமார் (27) என்ற மகனும், பிரியா (25) என்ற மகளும் இருந்தனர். அருண்குமார், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். பிரியா, உடன்குடி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். இவர்களுடைய உறவினரின் திருமண விழா கோவையில் நாளை (வியாழக் கிழமை) நடக்கிறது. எனவே, அங்கு குடும்பத்தினருடன் செல்வதற்கு சேகர் திட்டமிட்டார். 

இந்நிலையில் நேற்று காலையில் பிரியா தன்னுடைய தாயாரிடம், பள்ளிக்கு சென்று விடுப்பு எடுத்து விட்டு வருவதாக கூறிச் சென்றார். பின்னர் அவர் பள்ளிக்கு செல்லாமல், மதியம் 1 மணியளவில் நாசரேத் பேருந்து நிலையத்துக்கு வந்தார். அங்கு அவர், சாணி பவுடரை (விஷம்) தண்ணீரில் கலந்து குடித்தார்.இதனால் பேருந்து நிலையத்தில் பயணிகள் அமரும் இருக்கையிலேயே வாந்தி எடுத்து மயங்கி விழுந்த பிரியா சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து, நாசரேத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே, போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தற்கொலை செய்த பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியை பிரியா தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாசரேத் பேருந்து நிலையத்தில் பள்ளிக்கூட ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியது.

பொதுமக்களை நெருங்கவிடாத போலீசார் 

ஆசிரியை துடி,துடித்துக் கொண்டு சாவதை பார்த்து  கொண்டும், பயணிகள் நெருங்காதவாறு காவலுக்கு நின்ற வேடிக்கை பார்த்த காவல் துறையால் நாசரேத் பேரூந்து நிலையத்தில் கூடியிருந்த பயணிகள் மனவேதனை அடைந்தனர். விஷம் குடித்துவிட்டு அந்த இளம்பெண் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது, அவர் வெட்டு வந்து துடிப்பதாகக் கருதி பொதுமக்கள் சிலர் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால், போலீசார் அவரை நெருங்கவிடவில்லை. செல்போனில் படம் எடுக்கவும் தடை விதித்தனர். ஒருவேளை பொதுமக்களை அனுமதித்திருந்தால் உரிய நேரத்தில் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு காப்பாற்ற முயன்றிருக்கலாம் என சிலர் வேதனை தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes

Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory