» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழகம் பின்னோக்கி செல்கிறது : கனிமொழி எம்.பி. பேச்சு

புதன் 11, செப்டம்பர் 2019 8:20:43 AM (IST)தி.மு.க. ஆட்சியில் வளர்ச்சிப்பாதையில் இருந்த தமிழகம் தற்போது பின்னோக்கி செல்கிறது என தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி துணை செயலாளர் தாயகம் கவி எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தி.மு.க. இளைஞர் அணி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினால் உருவாக்கப்பட்டது. அதனை பலப்படுத்த அவர் ஒவ்வொரு கிராமம், கிராமமாக சென்று உழைத்தார். அவரது உழைப்பு, ஆர்வம், பணி காரணமாக, இன்று வலுவான அணியாக இளைஞர் அணி உருவாகி உள்ளது. 

இன்று முக்கிய பொறுப்பில் உள்ள பலர் இளைஞர் அணியில் இருந்தவர்கள்தான். தி.மு.க. உணர்வு நமது உடலில் ஓடும் ரத்தம் போன்றது. அத்தகைய தி.மு.க. உணர்வு கொண்ட பாரம்பரியத்தை சேர்ந்த உதயநிதி இளைஞர் அணி பொறுப்பேற்று உள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல இடங்களில் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இளைஞர் அணியினர் குளங்களை தூர்வார தீர்மானித்து இருப்பது சிறப்பானது. பா.ஜனதா கட்சி மக்களை சாதி, மதத்தின் பெயரால் பிரிக்கும் இயக்கம். தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க., பா.ஜனதாவுக்கு ரத்தின கம்பளம் விரித்து, அதன் கொள்கைகளை தமிழகத்துக்கு கொண்டு வரும் கருவியாக உள்ளது. 

பலர் சமூக ஊடகங்களில் பொய்யான கருத்துகளை பதிவிடுகிறார்கள். இதனை எதிர்த்து களமாட நாம் சரித்திரம் தெரிந்து இருக்க வேண்டும். இன்றைய கல்வி உள்ளிட்டவற்றை பெற எத்தனை போராட்டங்கள் நடத்தப்பட்டது என்பதை தெரிந்து இருக்க வேண்டும். நீங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடுவது மட்டுமின்றி, தொடர்ந்து களப்பணியாற்ற வேண்டும். நாளைய தமிழகம் நம் கையில், திராவிட இயக்கத்தின் கையில் கொண்டு வர வேண்டும். தி.மு.க. ஆட்சியில் வளர்ச்சிப்பாதையில் இருந்த தமிழகம் தற்போது பின்னோக்கி செல்கிறது. ஆகையால் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைவது உங்கள் கையில்தான் உள்ளது. அதனை நீங்கள் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட 3 தொகுதிகளிலும் இளைஞர் அணியில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களை சேர்ப்பது, விளாத்திகுளம், கோவில்பட்டி தொகுதிகளில் அ.தி.மு.க. அரசால் தூர்வாரப்படாத கண்மாய்களை கண்டறிந்து விரைவில் தூர்வார நடவடிக்கை எடுப்பது, இளைஞர் அணி சார்பில் அண்ணா பிறந்தநாள் மற்றும் தலைவர் கலைஞர் பிறந்த நாளில் விளையாட்டு, பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை வாசித்தல் போட்டிகள் நடத்தி வருகிறோம். அடுத்த ஆண்டு முதல் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1-ந் தேதி விளையாட்டு போட்டிகள் நடத்துவது என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

ராஜ்குமார்Sep 11, 2019 - 05:28:04 PM | Posted IP 108.1*****

நான் ஸ்டேட்டஸ் போட்ட மட்டும் ஏன் டெலிட் பண்றீங்க

ராஜ்குமார்Sep 11, 2019 - 05:27:02 PM | Posted IP 108.1*****

மனு குடுக்கணும் எங்க இருக்கீங்க அக்கா.

அருண்Sep 11, 2019 - 10:17:30 AM | Posted IP 162.1*****

நல்லவன் மாதிரியே நடிக்காதீங்கடா. அரசியல்வாதி எல்லாவனுமே திருடனுங்கதான்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 1:23:57 PM (IST)

நர்சிங் மாணவி திடீர் மாயம்: போலீஸ் விசாரணை

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 12:17:01 PM (IST)

Sponsored Ads

Anbu Communications
CSC Computer Education


Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory