» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பணம் செலுத்தியும் குடிநீர் இணைப்பு வழங்கவில்லை : தமிழர் விடியல் கட்சி குற்றச்சாட்டு

திங்கள் 9, செப்டம்பர் 2019 1:54:21 PM (IST)

நான்காவது குடிநீர் திட்டத்தில் பணம் செலுத்தியும் இன்னமும் குடிநீர் இணைப்பு வழங்கவில்லை என தூத்துக்குடி ஆட்சியரிடம் தமிழர் விடியல் கட்சி புகார் மனு அளித்துள்ளது.

தமிழர் விடியல் கட்சி மாவட்ட பொறுப்பாளர் சந்தனராஜ் தூத்துக்குடி ஆட்சியர்க்கு அளித்த மனுவில், தூத்துக்குடி காமராஜ் கல்லுாரியிலிருந்து முள்ளக்காடு வரை, சாலையின் இரு புறங்களிலும் உடைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை மீண்டும் புதிதாக அமைத்து தர வேண்டும். முத்தையாபுரம் பகுதியிலிருந்து, முள்ளக்காடு வரை சாலையின் இரு புறங்களிலும் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும். முத்தையாபுரம் பகுதியில் நான்காவது குடிநீர் திட்டத்தின் மூலம் வீடுகளில் இணைக்கப்பட வேண்டிய குடிநீர் குழாய்களை முறையாக பணம் செலுத்தியும் இன்னும் இணைக்கப்படவில்லை.

எனவே உடனே குடிநீர் குழாய்களை உடனே இணைக்க வேண்டும். முத்தையாபுரம் பல்க் பேருந்து நிறுத்தம் துறைமுகம் மற்றும் ஸ்பிக் உரத் தாெழிற்சாலை செல்லும் சந்திப்பில் ரவுண்டானா அமைத்து சாலை போக்குவரத்தினை சீர் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

TUTYSep 10, 2019 - 01:29:23 PM | Posted IP 162.1*****

தண்ணீர் லைன் வராமலே லைன் வந்த பிறகு அதற்கும் கட்டணம் வாங்கி உள்ளார்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Black Forest Cakes

Anbu Communications





Thoothukudi Business Directory