» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு செட்டாப் பாக்ஸ்களை செயலாக்கம் செய்ய வேண்டும் : உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களுக்கு ஆட்சியர் உத்தரவு

செவ்வாய் 27, ஆகஸ்ட் 2019 5:12:27 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு செட்டாப் பாக்ஸ்களை பெற்றுக் கொண்டு தனியார் கேபிள் தொழில் நடத்தி வரும் உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்கள் உடனடியாக அரசு செட்டாப் பாக்ஸ்களை செயலாக்கம் செய்திட வேண்டும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது : தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திலிருந்து அரசு செட்டாப் பாக்ஸ்களை பெற்றுக் கொண்டு, செயலாக்கம் செய்யாமல் தனியார் செட்டாப் பாக்ஸ்களை கொண்டு கேபிள் தொழில் நடத்தி வரும் அரசு பதிவு பெற்ற உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்கள் உடனடியாக அரசு செட்டாப் பாக்ஸ்களை செயலாக்கம் செய்ததிடல் வேண்டும். 

அவ்வாறு செயலாக்கம் செய்யாத உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும் அதே பகுதியில் புதிய அரசு பதிவு பெற்ற உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உருவாக்கப்படுவார்கள் எனவே, அனைத்து உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்களும் தாங்கள் பெற்றுள்ள அரசு செட்டாப் பாக்ஸ்களை உடனடியாக செயலாக்கம் செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

பாலாAug 28, 2019 - 11:08:51 PM | Posted IP 162.1*****

அரசு செட்டப் பாக்ஸ் எங்கு கிடைக்கும்.

DURAIAug 28, 2019 - 03:15:04 PM | Posted IP 108.1*****

அரசு SETUP BOX இலவசம் னு சொல்லுறாங்க ஆனா எங்க பாத்திமா நகர் ல ஒரு CONNECTION + ACCTIVATION CARGES RS 1050 வாங்குறாங்க

மக்கள்Aug 28, 2019 - 09:44:44 AM | Posted IP 173.2*****

அது இருக்கட்டும் முதல்ல எவ்வளவு வசூல் பண்ணுறாங்க பாருங்க .. எல்லாம் திருட்டு பயலுக

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 1:23:57 PM (IST)

நர்சிங் மாணவி திடீர் மாயம்: போலீஸ் விசாரணை

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 12:17:01 PM (IST)

Sponsored Ads

Black Forest Cakes

CSC Computer Education

Anbu Communications
Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory