» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போல்டன்புரம் புனித சார்லஸ் ஆலய திருவிழா : கொடியேற்றத்துடன் துவங்கியது

வெள்ளி 23, ஆகஸ்ட் 2019 8:03:46 PM (IST)

தூத்துக்குடி போல்டன்புரம் புனித சார்லஸ் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

போல்டன்புரம் புனித சார்லஸ் ஆலய திருவிழா இன்று (23ம் தேதி) துவங்கி வரும் செப்டம்பர் 1ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் தாெடக்க நாளான இன்று அருள்தந்தை பிராங்கிளின் பெர்ணாண்டோ தலைமையில் அருள்தந்தை ரொனாலட் மிசியர் முன்னிலையில் அருள்தந்தை பென்சன் மறையுரையுடன் கொடியேற்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. வரும் 25 ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பங்கு தந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில்  தெலசால் அருட்சகோதரர் புதுநன்மை பெறுவோர்க்கு ஞானம் வழங்குகிறார்.  

31 ம் தேதி காலை நவநாள் திருப்பலி நடைபெறும். அதில் கத்தோலிக்க பள்ளிகளின் கண்காணிப்பாளர் பென்சிகர்  தலைமையில் நவநாள் திருப்பலி நடைபெறுகிறத. 1ம் தேதி காலை 7.15 மணிக்கு திருவிழா திருப்பலி ஸ்டீபன் மரியதாஸ் தலைமையில் நடைபெறும். அருட்தந்தை சைமன் புதுநன்மை வழங்குகிறார். அருட்தந்தை அருள்வளன் மற்றும் ஜேசுதாஸ் ஆகியோர் திருப்பலியில் ஜெபிக்கின்றனர். மாலை 7 மணிக்கு கலை இரவு,பரிசுமழை அருட்சகோதரர் அருள்ராஜ் தலைமையில் நடக்கிறது.

திருவிழா நாட்களில் காலை திருப்பலியும் மாலை ஆராதனையும், நடைபெறும். 10ம் திருநாள் அன்று பங்கின் திருவிழாவாக கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஆரோக்கியதாஸ், பங்கு பேரவை தலைவர் தனிஸ், செயலாளர் மகேஷ் மற்றும் உறுப்பினர்கள் பங்கு மக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory