» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பெண்ணிடம் 3½ பவுன் நகை பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!!

வெள்ளி 23, ஆகஸ்ட் 2019 4:55:34 PM (IST)

தூத்துக்குடியில் பெண்ணிடம் 3½ பவுன் நகை  பறித்துச் சென்ற மர்ம நபர்ளை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் சாந்தி நகரைச் சேர்ந்தவர் அருள் பேரின்பம். இவரது மனைவி கவிதா (38). மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராக இவர் நேற்று சுயஉதவிக் குழு கூட்டத்திற்கு சென்றுவிட்டு ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். பாரதி நகர் 4வது தெருவில் வரும்போது அவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த 2பேர் கவிதாவின் கழுத்தில் கிடந்த 3½ பவுன் நகையை பறித்துச் சென்றனர்.

இதன் மதிப்பு ரூ.80ஆயிரம் ஆகும். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.  புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த நகை பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications
Thoothukudi Business Directory