» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குழந்தை உளவியல் குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி : ஆட்சியர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார்.

வெள்ளி 23, ஆகஸ்ட் 2019 3:28:11 PM (IST)தூத்துக்குடியில் அரசு, அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை உளவியல் குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி  துவக்கி வைத்தார்.

தூத்துக்குடியில் சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சார்பில் தூத்துக்குடி கல்வி மாவட்ட அரசு, அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை உளவியல் குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி இன்று (20.08.2019) நடைபெற்றது. இப்பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்துகொண்டு துவக்கி வைத்தார். இப்பயிற்சியில் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சுமார் 130 பேர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சிகள் குழந்தைகள் நலனோடு தொடர்புடைய துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள். மாணவர்கள் ஆகியோருக்கு ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டு வருகிறது. 

தூத்துக்குடி கல்வி மாவட்ட பகுதியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை உளவியல் குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி இன்று வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் செயல்பாடுகள், குழந்தை நலக்குழு, இளைஞர் நீதிக்குழுமம் அமைப்பு மற்றும் செயல்பாடுகள், குழந்தை பாதுகாப்பு, குழந்தை உரிமைகள், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, பள்ளி இடைநிற்றலை கண்டறிந்து மீண்டும் கல்வியை தொடரச் செய்தல், இளைஞர் நீதிச் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டம் 2015, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 மற்றும் குழந்தை நலனோடு தொடர்புடைய பிற சட்டங்கள், குழந்தை உளவியல், குழந்தைகளை கையாளும் முறை, பள்ளி மாணவர்களிடையே தற்கொலை எண்ணங்களை தடு;த்தல் போன்ற தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இப்பயிற்சியை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். குழந்தைகளுடன் எப்போதும் தொடர்புடைய நீங்கள் குழந்தைகளின் உரிமைகள், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும். கல்வி கற்றுக்கொடுப்பது மட்டுமே தங்களது பணி என்று எண்ணாமல் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அவர்களது பெற்றோர்களை அழைத்து பேச வேண்டும். மேலும், இந்த குழந்தைகள்மீது தனிக்கவனம் செலுத்தி அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நமது மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு துறை மூலம் ஒன் சாப் சென்டர் துவக்கி வைக்கப்பட்டது. 

இதில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், அவர்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கவும் குழு நியமிக்கப்பட்டு செயல்படுகிறது. பள்ளிகளில் வாகன ஓட்டுனர்களின் முழு விவரங்களை தெரிந்தபின்பு அவர்களை பணியில் அமர்த்திட வேண்டும். மேலும், குழந்தை காப்பகங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும். குழந்தை காப்பகங்களில் உள்ள வார்டன்கள், காவலர் உள்ளிட்டோரின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும்போது 1098 மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும். இக்கூட்டத்தில் தாங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள குழந்தை பாதுகாப்பு சட்டங்கள் குறித்து ஆசிரியர்களிடம் தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ஜோதிகுமார், பள்ளி கல்வித்துறை துணை ஆய்வாளர் தர்மராஜன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜா, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு ஆற்றுப்படுத்துநர் ஜான் மோசஸ் கிரிதரன், தூத்துக்குடி குழந்தை நலக்குழு தலைவர் தாம்சன் தேவசகாயம், சட்டம் உடன் கலந்த நன்னடத்தை அலுவலர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சுபாஷினி, உளவியல் மருத்துவர் டாக்டர்.சிவசைலம், தட்டப்பாறை அரசினர் குழந்தைகள் இல்லம் கண்காணிப்பாளர் ஜெயா, தூத்துக்குடி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சமூகப்பணியாளர் பிரகாஷ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

Thoothukudi Business Directory