» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்ட விவசாய பணிகளுக்கு தண்ணீர் திறப்பு: முதல்வருக்கு அமைச்சர், எம்எல்ஏ நன்றி!!

வெள்ளி 23, ஆகஸ்ட் 2019 12:38:03 PM (IST)தூத்துக்குடி மாவட்ட விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் சண்முகநாதன் எம்எல்ஏ நன்றி தெரிவித்தனர். 

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ மற்றும் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் 15.8.2019 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து இப்பகுதி விவசாயிகளின் சார்பில் கோரிக்கை வைத்தார்கள். 

இக்கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் 22.8.2019 இன்று திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட விவாசயிகள் பாசன வசதிக்காகவும் கால்நடை மற்றும் பொது மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்திடவும் 26.8.2019 முதல் 14.9.2019 முடிய பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து 1500 மில்லியன் கனஅடி விதம் தண்ணீர் திறக்க ஆணையிட்டுள்ளார். இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி, திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை வட்ட விவசாயிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம், திருவைகுண்டம், ஏரல், திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி வட்டங்களைளச் சேர்ந்த 62,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது. விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

தூத்துக்குடி மாவட்ட விவசாய பணிகளுக்கும் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும் மாவட்ட மக்களின் சார்பில் வைத்த கோரிக்கையை ஏற்று பாசன வசதிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட உடனடியாக ஆணையிட்ட தமிழக முதல்வர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமியைசெய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்து பூங்கொத்து வழங்கினர்.


மக்கள் கருத்து

மாம்பழம்Aug 23, 2019 - 09:24:48 PM | Posted IP 173.2*****

எல்லாம் ஓட்டுக்காக மக்களை ஏமாற்றும் நடிகர்களே

கொய்யாப்பழம்Aug 23, 2019 - 02:07:55 PM | Posted IP 162.1*****

விவசாயி, வைத்தியர், வாத்தியார் - சூப்பர் காம்பினேஷன் ஜி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory