» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே டெய்லர் வீட்டில் 5½ பவுன் நகை திருட்டு : போலீஸ் விசாரணை

வெள்ளி 23, ஆகஸ்ட் 2019 12:24:54 PM (IST)

தூத்துக்குடி அருகே டெய்லர் வீட்டின் பூட்டை உடைத்து 5½ பவுன் செயினை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி அருகேயுள்ள குறுக்குச் சாலை அன்னலட்சமி நகரைச் சேர்ந்தவர் வண்ணமுத்து. இவரது மனைவி மேரி (35). கணவன் - மனைவி இருவரும் அப்பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகின்றனர். காலையில் வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில், நேற்று தம்பதியர் இருவரும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது அவர்களது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5½ பவுன் செயினை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 1:23:57 PM (IST)

நர்சிங் மாணவி திடீர் மாயம்: போலீஸ் விசாரணை

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 12:17:01 PM (IST)

Sponsored Ads



Black Forest Cakes

Anbu Communications



Nalam Pasumaiyagam

CSC Computer Education



Thoothukudi Business Directory