» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்களில் கொள்ளையடித்தவர் கைது: நகை, பணம் மீட்பு

வெள்ளி 23, ஆகஸ்ட் 2019 12:11:29 PM (IST)

சாத்தான்குளம் அருகே கோவில்களில் 1½ பவுன் நகை, மற்றும் உண்டியல் பணத்தை கொள்ளையடித்தவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே அறிவான்மொழி கிராமத்தில் பெருமாள் கோவில், மற்றும் இசக்கியம்மன் கோவில் அடுத்தடுத்து உள்ளது. நேற்று முன்தினம் இரவு பெருமாள் கோவிலில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர், சுவாமி கையில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க நகையையும், இசக்கியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பனத்தையும் திருடிச் சென்றுள்ளான். பின்னர், கோவில் மேற்கூரைக்கு தீவைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளான். 

இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து தீயை அணைத்துள்ளனர். பின்னர் கொள்ளை சம்பவம் தொடர்பாக கோவில் பொறுப்பாளர் வடக்குத் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் லிங்கதுரை (57) சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குபதிந்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக அதே கிராமம் தெற்குத் தெருவைச் சேர்ந்த கனகராஜ் மகன் மதியழகன் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த நகை, மற்றும் உண்டியல் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 1:23:57 PM (IST)

நர்சிங் மாணவி திடீர் மாயம்: போலீஸ் விசாரணை

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 12:17:01 PM (IST)

Sponsored Ads


CSC Computer Education


Nalam Pasumaiyagam

Black Forest Cakes


Anbu Communications




Thoothukudi Business Directory