» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விளையாட்டு விடுதி: முதல்வர் திறந்து வைத்தார்

வியாழன் 15, ஆகஸ்ட் 2019 8:42:24 AM (IST)

கோவில்பட்டியில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிறப்பு விளையாட்டு விடுதியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம்  திறந்து வைத்தார். 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சார்பில், ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானம் அருகே கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி கட்டப்பட்டது.  இந்நிலையில், இந்த கட்டடத்தை திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். 

இதையொட்டி கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் டி.வி.பேட்ரிக் கலந்துகொண்டு, விளையாட்டு வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.  நிகழ்ச்சியில், ஹாக்கி பயிற்சியாளர் முத்துகுமார், விடுதி காப்பாளர் உதயராஜா, கூடைப்பந்து பயிற்சியாளர் ஜெயரத்தினராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam Pasumaiyagam




Anbu Communications



Thoothukudi Business Directory