» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி பகுதியில் ஆகஸ்ட் 17-ல் மின்தடை

வியாழன் 15, ஆகஸ்ட் 2019 8:40:12 AM (IST)

மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கோவில்பட்டி கோட்ட மின்வாரியத்திற்கு உள்பட்ட துணை மின் நிலையப் பகுதிகளில் சனிக்கிழமை(ஆக. 17) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து, கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எம்.சகர்பான் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவில்பட்டி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட கோவில்பட்டி, புதுகிராமம், இலுப்பையூரணி, சங்கரலிங்கபுரம், லாயல்மில் பகுதி, முகமதுசாலியாபுரம், இளையரசனேந்தல், அய்யனேரி, அப்பனேரி, விஜயாபுரி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், ஈராச்சி, கசவன்குன்று, துறையூர், காமநாயக்கன்பட்டி, சிட்கோ துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட முத்துநகர், சிட்கோ, ஜோதிநகர், புதுரோடு, எம்.துரைச்சாமிபுரம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட வானரமுட்டி, காலாங்கரைப்பட்டி, குமரெட்டியாபுரம், காளாம்பட்டி, சங்கரலிங்கபுரம், நாலாட்டின்புத்தூர், இடைசெவல், சத்திரப்பட்டி, வில்லிசேரி, மெய்த்தலைவன்பட்டி, சிவஞானபுரம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட சிவஞானபுரம், வாகைத்தாவூர், சவலாப்பேரி, தளவாய்புரம், நாகம்பட்டி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

பிற்பகல் 1 முதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படும் பகுதிகள்: கழுகுமலை துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட கழுகுமலை, குமாரபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பனேரி, குருவிகுளம், எப்போதும்வென்றான் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட எப்போதும்வென்றான், எட்டயபுரம், கீழமங்கலம், பசுவந்தனை, நாகலாபுரம், கடம்பூர், ஒட்டநத்தம், குளத்தூர், சூரங்குடி, செட்டிக்குறிச்சி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட செட்டிகுறிச்சி, சிதம்பரம்பட்டி, கட்டாலங்குளம், வெள்ளாளன்கோட்டை, ஓலைகுளம், திருமங்கலங்குறிச்சி, பெரியசாமிபுரம், மூர்த்தீஸ்வரபுரம், சன்னதுபுதுக்குடி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட கயத்தாறு பேரூராட்சி பகுதிகள், ராஜாபுதுக்குடி, தலையால்நடந்தான்குளம், ஆத்திகுளம், தெற்கு மற்றும் வடக்கு இலந்தைகுளம், சாலைப்புதூர், மு.கைலாசபுரம், கீழக்கோட்டை, கொடியன்குளம், என்.புதூர், நாரைக்கிணறு, புளியம்பட்டி, சவலாப்பேரி, ஆலந்தா ஒருபகுதி, பிராஞ்சேரி, இத்திகுளம், வடக்கு செழியநல்லூர், காங்கீஸ்வரன்புதூர், குப்பனாபுரம், பருத்திகுளம், சன்னதுபுதுக்குடி, வடகரை, காற்றாலை மின் தொடர் 1, 2 ஆகிய பகுதிகளில் பிற்பகல் 1 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Anbu Communications
Black Forest Cakes
Thoothukudi Business Directory