» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வழக்கறிஞர் கொலை: நீதிமன்றத்தில் வாலிபர் சரண்

வியாழன் 15, ஆகஸ்ட் 2019 8:13:19 AM (IST)

வல்லநாடு அருகே நடந்த வழக்கறிஞர் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் கோவில்பட்டி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள சென்னல்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சண்முகவேல் மகன் வேல்முருகன் (27) வக்கீல். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கும் இடப் பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. கடந்த 11-ம்  தேதி செல்வம் உள்ளிட்டவர்கள், சமாதானம் பேசுவதாக வேல்முருகனை வீட்டுக்கு அழைத்து சென்று அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். 

இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னல்பட்டியை சேர்ந்த அருள்ராஜ் (19), கால்வாய் பகுதியை சேர்ந்த மகேஷ் ஆகியோரை தேடி வந்தனர். இந்த நிலையில் அருள்ராஜ் நேற்று காலையில் கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam


Anbu Communications



CSC Computer Education



Thoothukudi Business Directory