» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடி மராமத்து பணிகள் : தூத்துக்குடி ஆட்சியர் ஆய்வு

புதன் 14, ஆகஸ்ட் 2019 7:26:14 PM (IST)தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் கோரம்பள்ளம் வடிநில கோட்டத்திற்குட்பட்ட பொம்மையாபுரம் கண்மாய் ரூ.43 லட்சம் மதிப்பில்  முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாறும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் கோரம்பள்ளம் வடிநில கோட்டத்திற்குட்பட்ட பொம்மையாபுரம் கண்மாய்; ரூ.43 லட்சம் மதிப்பில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாறும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  இன்று (14.08.2019) நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் வேலை நடைபெறுவதற்கான பேரேடுகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.  

ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: குடி மராமத்து பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள மேடு. பள்ளங்களை சமப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பணிகளை விரைவாகவும், மழை காலத்திற்கு முன்னதாக முடித்து கண்மாயை நீர் நிரப்பிட வழிவகை செய்ய வேண்டும். மேலும் பணிகளை தரமாகவும், ஒதுக்கப்பட்டுள்ள நிதியை முழுமையாகவும் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பணிகளின் தரம் குறித்து அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 522 சிறுகுளங்கள் தூர்வாரவும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியில் இருந்தும் குளங்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் அனைத்தும் வரும் மழைக்காலத்திற்குள் முடிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்தார். தொடர்ந்து, வெங்கடாசலபுரம் அருகில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து வெங்கடாசலபுரம் குடிநீர் குளம் நல்ல முறையில் தூர்வாரப்பட்டுள்ளது. அதைப்போலவே, பாசன குளத்தையும் தூர்வார வேண்டும் என கோரிக்கை வைத்தனர். குளம் பகுதியை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். 

இந்த ஆய்வின்போது கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் ரகு, பொதுப்பணித்துறை கோரம்பள்ளம் வடிநில கோட்டம் உதவி செயற்பொறியாளர் மணிகண்டராஜன், உதவி பொறியாளர் பிரியதர்ஷினி, பொம்மையாபுரம் கண்மாய் பாசன குடிமராமத்து விவசாயிகள் சங்க தலைவர் ஆறுமுகப்பாண்டியன், துணைத்தலைவர் முருகன், வேப்பலோடை அன்னை தெரசா கிராம பொதுநல சங்க தலைவர் முனியசாமி, செயலாளர் ஜேம்ஸ் அமிர்தராஜ், பொருளாளர் கண்ணன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Anbu CommunicationsNalam PasumaiyagamThoothukudi Business Directory