» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூய மரியன்னை கல்லூரியில் வினாடி வினா நிகழ்ச்சி

புதன் 14, ஆகஸ்ட் 2019 6:40:39 PM (IST)தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாணவர்களுக்கான வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது.

மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பவியல் சார்பில் ஸ்டார் கல்லூரி திட்டத்தின் கீழ் தூய மரியன்னை கல்லூரியின் உயிரியல்  மற்றும் இயற்வேதியியல் துறையில் இளங்கலை மாணவர்களுக்கான வினாடி வினா நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது.  இப்போட்டியில் தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வேதியியல், நுண்ணுயிரியல் மற்றும் உயிரி தொழில் நுட்பவியல் துறைகளை சார்ந்த இளங்கலை கல்லூரி மாணவர்கள் பங்கேற்றறனர்.  

போட்டியில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்த அணிகளிலிருந்து 5 அணிகள் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டன. உயிரியல் துறை சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் படங்களை இணைக்கும் சுவாரஸ்யமான சுற்றுகளும் இடம் பெற்றன.  தாவரவியல் துறையின் உதவிப் பேராசிரியர் பாலின் ஜெனிபர், விலங்கியல் துறை உதவி பேராசிரியர் ஸ்ரீப்ரியா, இயற்பியல் துறை உதவி பேராசிரியர் தனலட்சுமி, வேதியியல் துறை உதவி பேராசிரியர் திவ்யா வினாடி வினா நடத்துனராக இருந்து கேள்விகளைக் கேட்டனர். 

இந்த வினாடி வினா நிகழ்ச்சி மாணவர்களின் பாட அறிவை சோதிப்பதாக மட்டுமின்றி அவர்களின் பொது அறிவையும் தூண்டுவதாக அமைந்திருந்து.  சதக்கதுல்லாஹ் அப்பா கல்லூரி   மற்றும்    திருச்சிலுவைக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் முதல் இடத்தையும் மற்றும்  போப் கல்லூரி,  சதக்கதுல்லாஹ் அப்பா  கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடத்தையும் மற்றும் ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரி,  வ.உ.சி கல்லூரி மாணவர்கள் மூன்றாம்  இடத்தையும் கைப்பற்றினர். கல்லூரி முதல்வர் முணைவர்  லூசியா ரோஸ்மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ஸ்டார் கல்லூரி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய ஜெ னிசியஸ் அல்போன்ஸ் நன்றி உரை ஆற்றினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory