» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாட்டு வண்டி போட்டி: மருகால் குறிச்சி காளை அபாரம்

புதன் 14, ஆகஸ்ட் 2019 5:28:10 PM (IST)கால்வாய் கிராமத்தில் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு  நடந்த மாட்டு வண்டி போட்டி மருகால் குறிச்சி வண்டி வெற்றி பெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே கால்வாய் கிராமத்தில் உலகு முத்தாரம்மன் கோயில் கொடைவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி, மற்றும் குதிரை வண்டி போட்டி நடந்தது. பெரிய மாட்டு வண்டிபோட்டியை ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன் துவக்கி வைத்தார். சிறிய மாட்டு வண்டி போட்டியை செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் துவக்கி வைத்தார். பெரிய மாட்டு வண்டி போட்டியில் 12 வண்டிகள் கலந்துகொண்டனர். இந்த போட்டி கால்வாய் அரசு பள்ளியில் இருந்து வல்லகுளம், தெற்கு காரசேரி வழியாக தாதன்குளம் ரயில்வே கேட் எல்லையாக குறிக்கப்பட்டிருந்தது. 

பெரியமாட்டு வண்டி போட்டியில் முதல் கொடியையும் முதல் பரிசையும், இரண்டாம் பரிசையும் மருகால் குறிச்சி சுப்பம்மாள் வண்டி அணியினர் தட்டி சென்றனர். மூன்றாவது பரிசை சங்கரபேரி மாட்டு வண்டி பெற்றது. முதல் பரிசான 31 ஆயித்தினை ராமையாவும், இரண்டவது பரிசு 25 ஆயிரத்தினை சிவனும், மூன்றாவது பரிசு 17 ஆயிரத்தினை ஈஸ்வரனும் வழங்கினர். சின்ன மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை, முதல் கொடியையும் மருகால் குறிச்சி, இரண்டாவது பரிசை கால்வாய் முத்துராமலிங்கம், மூன்றாவது பரிசை மேட்டூர் முத்தம்மாள் வண்டி பெற்றது.முதல் பரிசான 21 ஆயிரத்தினை ராமசந்திரனும், இரண்டாம் பரிசு 15 ஆயிரத்தினை தெயவக்கண்ணனும், மூன்றாம் பரிசு 11ஆயிரத்தினை ஆச்சிமுத்துவும் வழங்கினர்.

குதிரை வண்டி போட்டியில் முதல் பரிசு 15 ஆயிரத்தினை சேது என்ற சேதுராமலிங்கமும், இரண்டாம் பரிசு 10 ஆயிரத்தினை அழகுபாண்டியனும், மூன்றாம் பரிசு 7500யை ஆண்டியும் வழங்கினர். முதல் கொடிபெற்றவர்களுக்கு சங்கர் பாண்டியன், நம்பி, சங்கர் சார்பில் குத்துவிளக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முத்துராமலிங்கம், வெள்ளூர் அலங்காரம், முத்து, சவராமங்கலம் உதயசூரியன், பாலமடை அங்கப்பன், அ.தி.மு.க காசிராஜன், மதிமுக ராஜகோபால், உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கால்வாய் சிவா தொகுத்து வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை ரேக்லா ரேஸ் கமிட்டியார்கள் பொன்ராஜ், சிவனு, சேது என்ற சேதுராமலிங்கம், முருகையாபாண்டியன் உள்பட முத்து ஸ்டார் கமிட்டியினர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Anbu CommunicationsCSC Computer Education

Black Forest Cakes
Thoothukudi Business Directory